16.01.2009.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக காலவரையற்ற உண்ணாநோன்பைத் துவக்கிவிட்டார் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மத்திய அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி திருமாவளவன் நேற்று சென்னையை அடுத்த மறைமலை நகரில் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.
இதுவரை திருமாவளவனின் போராட்டம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த முதல்வர் கருணாநிதி, தனது கட்சியனருக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் சில நாட்கள் முன்பு திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் திராவிடர் கழகச் செயலாளர் வீரமணி தன்னை வந்து சந்தித்தபோது மத்திய அரசிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பிரச்சினை குறித்து பேசுவதாக வாக்களித்தும், தன்னிச்சையாக திருமாவளவன் உண்ணாநோன்பில் இறங்கிவிட்டார் என்று விமர்சித்துள்ளார்
தலைவரே இது உங்களுக்கேநியாயமாகத் தெரிகிரதா?நீங்க இருக்கவேண்டிய இடத்தை திருமாநிரப்பியிருக்கிறார். அவருடைய ஈகைநிறைந்த மான உணர்வில் குறை காணாதீர்கள்.
1.//இதேவேளை இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் திருமாவளவனை நேரில் சந்தித்து உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளுமாறு ராமதாஸ் வலியுறுத்த உள்ளார்.
அதே போல் தமிழக மூத்த அமைச்சர் ஒருவரும் (ஆற்காடு வீராசாமி அல்லது துரைமுருகன்) உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்த உள்ளார். எனவே தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று திருமா உண்ணாவிரத்தை கைவிடுவார் என தெரிகிறது.//
2.//தமிழகத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனினால் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தப் போராட்டங்களுக்கு அஞ்சி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் யுத்தம் நிறுத்தப்படமாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.//
இந்த இரு செய்திகளும் புலியாதரவு ஊடகத்தில் வெளிவந்திருக்கிறது.
ஆகவே திருவாளர் திருமாவளவன் அவர்கள் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கப் போகிறார்.