தி.மு.க தலைவர் மு.கருணாநிதி தனித் தமிழீழம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியிருந்தது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து வை.கோ மற்றும் சீமான் போன்றோர் பதைபதைத்து அவருடன் மோத களத்தில் இறங்கியுள்ளனர்.
தனி ஈழம் பற்றி பேச திமுக தலைவர் கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
இலங்கையில் தமிழர்களை அழிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் அதற்கு துணைநின்றன. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியபோதும் சரி, படுகொலைகள் நடந்தபோதும் சரி அவற்றைத் தடுத்த நிறுத்த குரல் கொடுக்காமல் மௌனமாக இருந்தார் கருணாநிதி.
அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது தனி ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுகிறார். தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்துள்ளார். அதை எதிர்த்து நாங்கள் வாதிட்டோம். அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஈழக் கனவான்களின் கடந்தகாலக் காட்டிக்கொடுப்புக்கள் ஒரு புறம் கல்வெட்டுக்களாக அறையப்பட்டிருக்க மறுபுறத்தில் தமிழ் நாட்டில் ஈழ அகதிகள் மிருகங்கள் போன்று நடத்தப்படுவதை இவர்கள் கண்டு கொள்வதில்லை. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் தொடர்கிறது.
வாய்வீசாளர் கைகோ அரச்ச மாவ அரபோமா அவர்கள் உண்மையில் ஓர் தமிழர் அல்ல! அவர் தெலுங்கர். அவர் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது அந்த வழியில்தான். அதாவது தமிழனை விளிப்படையச் செய்ததுதான். எனவே, தானும் அதே வழியைப் பின்பற்றினால் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எண்ணித்தான் தி.மு.க.வுக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக இலங்கை சென்று பலரிடமும் அருகில் நின்று ஒளிப்படம் எடுத்து அதனை தமிழகத்தில் பரப்பவிட்டார். அதன்படி தன்னை ஓர் மாவீரன் என்று பறைசாற்றினார்.
தெலுங்கு நாயுடு இனத்தைச் சேர்ந்த இவர், தி.மு.க. விலிருந்து ஓடுவதும், பின்னர் திரும்பி வருவதுமாக ஒரு சந்தர்ப்பவாதியாகவே தமிழகத்தில் கணிக்கப்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் தமிழர்கள் அவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துள்ளனர். ஆனால், ஈழத் தமிழர் விடயத்தில் தன்னை ஓர் வேங்கையாகக் காண்பிப்பார். கத்துவார், கர்ஜனை செய்வார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் அப்படியே அசடுவழிந்து அவரது பேச்சை ரசிப்பர். கையோடு டொலர்களையும் கண்கலங்கிக் கொடுத்து அனுப்புவர். சினிமாவில் சந்தர்ப்பம் கிடைக்காத சிறந்த நடிகர் இவர்!
இத்தனை ஆண்டுகளின் பின்னர் ஈழத் தமிழருக்கு விடிவு ஒன்று ஏற்படும் தருணம் நெருங்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமாயின் அந்தப் புகழ் கலைஞர் அவர்களைச் சென்றடையும் என்பது அனைத்துத் தமிழருக்கும் தெரிந்த ஒன்றாயிருக்கிறது.
தீர்வு தமிழீழமாகக் கூட அமையலாம்! ஏனெனில், கலைஞர் அவர்களின் வயது, அறிவு, புகழ் அனைத்தையும் பயன்படுத்தி தீர்வு ஏற்படுமானால் கலைஞருக்கு அது நீங்காப் புகழ் ஆகிவிடும். எனவே, இதனைத் தடுப்பது எவ்வழியில் என்று சிந்தித்த வைகோ அவர்கள் நேற்று 22-10-2008 அன்று ராணி சீதை மண்டபத்தில் கலைஞர் அவர்களின் புகழைத் தடுக்கும் முயற்சியாக “தமிழ்நாடு தனிநாடாக வேண்டும”; என்ற கர்ஜனையை கக்கினார், போதாததற்கு கண்ணப்பன் அவர்களையும் அதே தொனியில் பேசும்படி தூண்டினார்.
மத்திய அரசு கலைஞரின் வேண்டுகோளை ஏற்று தீர்வுக்கு முனைந்தால் அதனைத் தடுக்கும் ஒரே வழி தமிழ்நாடு பிரியும் என்பதை முன்வைப்பதாகும். இந்த முழக்கம் வட இந்தியர்களுக்கு எட்டினால் ஈழத்தைப் பிரிக்காதே என்ற கோசம் மேலோங்கும். ஈழத்தைப் பிரித்தால் இந்தியாவும் பிரிந்துவிடும் என்ற பயம் வட இந்தியாவில் தொற்றிக் கொள்ளும். எனவே, மத்திய அரசு பின்வாங்கிவிடும். மத்திய அரசு பின்வாங்கினால் கலைஞர் அவர்களின் புகழ் அடிபட்டுப்போகும். இந்தச் சதியைத்தான் வைகோ அவர்கள் நேற்று அரங்கேற்றினார்.
வைகோ, அவர்கள் ஒரு குழந்தையல்ல, ஈழம் பிரிந்தால் தமிழ்நாடு பிரிந்துவிடும் என்ற பயம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. “கலைஞர் அவர்களின் முயற்சியால் ஈழத்துக்குத் தீர்வு கிடைக்கும்” என்ற இறுதிக்கட்ட முயற்சியைக் கெடுக்கும் சதிச் செயல்தான் வைகோ அவர்கள் இப்போது செய்திருக்கிறார்.
தமிழ்நாடு தனிநாடாகப் பிரியும் என்ற எண்ணத்தை யாரும் தூண்டக்கூடாது என்பதற்காகத்தான் கலைஞர் அவர்கள், வைகோ அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். ஈழத் தமிழருக்கான தீர்வு ஒன்றினை எட்டும் நேரத்தில், தமிழகப் பிரிவினையைத் தூண்டுவதன் மூலம் ஈழத் தமிழருக்கான தீர்வு தள்ளிப் போகும், அல்லது கைவிடப்படும். இந்த நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதுதான் வை.கோ. அவர்களின் விருப்பம்.
தனக்குக் கிடைக்காது விட்டாலும் எதிரிக்குப் புகழ் சேர்ந்துவிடக் கூடாது என்ற வைகோ அவர்களின் வஞ்சகத்தனத்தை அறிந்து கலைஞர் அவர்கள் தக்க நேரத்தில் சரியான முடிவெடுத்துச் செயற்பட்டுள்ளார். இந்தத் துணிகரச் செயலால் ஈழத் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.
கலைஞர் அவர்கள் செய்தது மிகவும் சரியானது. வைகோ அவர்களுக்கு அனுமதி வழங்கினால் இன்னும் பலரும் இதனைப் பயன்படுத்தி புகழ்தேட தமிழ் நாடும் தனிநாடாகவேண்டும் என்று கூச்சல் போடுவார்கள். வைகோ அவர்களை மட்டும் கைதுசெய்தால் போதாது, திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோரையும் கைது செய்ய வேண்டும்.
ஏனென்றால் தமிழீழத்துக்கான தீர்வு ஒன்றினைக் கெடுக்கும் நயவஞ்சகச் செயலைத்தான் இவர்கள் செய்துள்ளனர். இந்த வாய்வீச்சாளர்களால்தான் பல தவறுகள் கடந்த காலங்களில் நிகழந்துள்ளன. புலிகள் இயக்கம் கூட இந்த வாய்வீச்சாளர்களை ஊக்குவித்து வாழவைத்துள்ளனர். இந்த வெட்டி வீரர்களால் முடியாத தீர்வொன்றை கலைஞர் ஏற்படுத்திவிடுவார் என்ற எண்ணத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈழத் தமிழர்களை தொடர்ந்தும் படுகுழியில் தள்ளும் பணியைத்தான் செய்துள்ளனர் இவர்கள்.
வட இந்தியரை மிரட்டுவதன் மூலம் கலைஞர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் வைகோ அவர்கள் செயற்பட்டுள்ளார். இது ஈழத் தமிழரை சம்மட்டியால் அடித்துக் கொல்லும் செயலுக்கு ஒப்பானதாகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது இந்த மைக் மைனர்களை ஈழத் தமிழர்கள் ஊக்குவிக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்வதுடன் கலைஞர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஈழத் தமிழர்கள் முழு ஆதரவு வழங்கவேண்டும்
பளயது ஆனால் புதியது
Balasingham Nadesan got gunned down because he called Vaiko. Let us talk about the Geneva Conventions. 1939.