பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்காகப் போராடிவரும் பலஸ்தீனியர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்புரிமை பெறுவதற்கான தமது பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இவ்வறிவித்தல் வெளிவந்ததுமே பரக் ஒபாமா தலைமையிலான அமரிக்க அரசு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் தமது வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்து பலஸ்தீனம் தனி நாடாவதையும், ஐக்கிய நாடுகளில் உறுப்புரிமை பெறுவதையும் எதிர்கப்போவதாக அறிவித்துள்ளது.
சோவனிச இஸ்ரேலிய அரசு உருவாக்கப்பட்ட பின்னர் தமது சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பலஸ்தீனயர்களை அமரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது. அமைதியான வழம் கொளிக்கும் நிலங்களில் வாழ்ந்த மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். இப்போது சுய நிர்ணய உரிமை கோரிப்போராடும் ஈழத் தமிழர்கள் பலஸ்தீனியர்களின் உரிமையை ஏற்றுக்கொள்வார்களா?
பலஸ்தீனியர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்வோம்
ஈழத்தமிழரிடம் எந்த அரசியல் இராஐதந்திர பலமுமில்லை ஐநாவின் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்த என்ற உண்மை ஒருபுறமிருக்கட்டும்.
பலஸ்தீனமெனும் பயங்கரவாத நாடு உருவாவது ஈழத்தமிழருக்குத்தான் கேடு. இப்பவே சிறிலங்கா அரசபயங்கரவாத அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பிற்கு வக்காலத்து வாங்கும் பணியையே பலஸ்தீன பயங்கரவாதிகள் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் இவர்களின் கைக்கு அதிகாரம் கிடைத்தால் சிறிலங்கா போன்ற அரசபயங்கரவாத நாடுகளின் கையே ஐநாவில் ஓங்கும். இது அப்பட்டமாய் தெரிந்த நிலையிலும் பலஸ்தீன பயங்கரவாதிகளிற்கு ஆதரவு அளிப்பதென்பது எங்கள் கையலேயே எமது கண்களை குத்திக்கொள்வது போன்றதாகி விடும். இது எமக்கு தேவையா!