கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில், 2010 ஆம் ஆண்டில் தமது விடுமுறையைக் கழிக்க விரும்புபவர்களுக்கு இலங்கைதான் சிறந்த சுற்றுலாத் தலம் என எழுதியிருந்தது. சிங்கள் பெரும்பான்மையினருக்கும், தமிழ் பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையில் நடந்த கொடூர போரால் சீரழிந்த இலங்கையில், கடந்த மே மாதத்திற்கு பின்னர் அமைதியான யுகம் தொடங்கியுள்ளதாக அப்பத்திரிக்கை செய்தி கூறியிருந்தது.
இவ்வாறு எழுதியமை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆனால் லண்டனை வதிவிடமாகக் கொண்ட பிரபல பாடகி M.I.A க்கு கடுங்கோபத்தை உண்டுபண்ணியது. தனது ட்விட்டர் இடுகைகள் பலவற்றிலும் இலங்கையில் நடக்கும் வன்முறைகளை மூடிமறைத்து எழுதிய நியூயோர்க் டைம்ஸுக்கு பல கண்டனங்களை வெளியிட்டிருந்தார்.
இப்போது தனது புதிய பாடலிலும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். “நியூயோர்க் டைம்ஸ்! விடுமுறையைக் கழிக்க இலங்கைக்கு செல்லலாம் என நினைக்கிறாயா?” என்று தனது பாடலில் எழுதியுள்ளதோடு இலங்கையில் சிறார்கள் கொல்லப்பட்டு அனாதைகளாக்கப்பட்ட படத்தையும் வலைத்தளத்தில் இணைத்துள்ளார். அதோடு கடந்த வியாழக்கிழமை டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ‘இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் சனல் 4 வீடியோ உண்மையானது என ஐ.நாகூறுகிறது என்ற தலைப்பையுடைய கட்டுரையையும் இணைத்துள்ளார்.
மேலும் இலங்கைக் கடற்கரையைப் பற்றியும் எழுதியுள்ள M.I.A. கடற்கரையில் கொல்லப்பட்ட சிறுவர்கள் சிதறிக்கிடக்கும் படத்தை அதனுடன் இணைத்துள்ளார். அவரின் இந்தக் கோபம் வெகுவிரைவில் ஒரு பாடலைப் பதிவுசெய்து அதன் வீடியோவை வெளியிடுவதற்கு தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– தகவல்: அலெக்ஸ் இரவி
மிஅ ஒரு சுதந்திர காற்றாய் ஒலிக்கின்றார்.அவரை தமிழ்ப்பெண்ணீன் சாதனையாய் ஏற்றூக்கொள்ளக் கூட புலம்பெயர்ந்த இளம் வயதினர் தயாராக் இல்லை.காப்புலிகளீடம் காணப்படும் தன் இனம் என்ற சுய உண்ர்வு கூட இல்லை.கேட்டால் கறூப்பர்கள் இன்னும் மூன்னேறவில்லைநாங்கள்நிலாவி பட்டம் விடுகிறம் என்ற பெருமையே பேசுகிறார்கள்.முதலில் தமிழர் என்ற உணர்வைநாம் பெற வேண்டும்.இந்த மண்ணீல் இந்தநிலைக்கு வருவது இலகுவல்ல என்பதை புரிந்திட வேண்டும்.மியாநமது பெருமை.
மேலும் தொடர்பாக you tubeஇல்:
http://www.youtube.com/watch?v=rCQsBodDLyg&feature=player_embedded
செய்திக்கு:
http://thatstamil.oneindia.in/movies/specials/2009/05/09-mia-urges-winfrey-to-help-stop-civilian-killing.html
மிக அருமை . never say u r happy when u r sad..
never say u r fine when u r not ok..
never say u feel good when u feel bad,..
never say u r alone when i m still alive…
good luck and best wishes for ever.
Rain of summer, snow of winter, grace of autumn, glory of spring, May beauty of every season give ur heart a beautiful reason 2 smile.May God suceed u in ur life. Best of luck & God bless u.
மிக விரைவி மியா ஆல்பம் வருவகிறது.இசையை அனுபவிக்க மறக்காதீர்.எமது இந்த்தின் பெருமை மியா.