கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் சித்தணி அருகே தண்டவாளம் மர்ம நபர்களால் தகர்ப்பட்டதாக போலீசார் சொன்னனர். பின்னர் பிரபாகரனின் தம்பிகளால் தகர்க்கப்பட்டதாகச் சொன்னனர். இதனால் ஈழ ஆதரவாளர்கள் பலரையும் இரவோடு இரவாக பிடித்துச் சென்று ரகசிய போலீஸ் முகாம்களில் அடைத்து வைத்து கட்டாய மூலங்கள் பெற்றனர்.இந்நிலையில் போலீசால் கடத்திச் செல்லபப்ட்ட எட்டு பேரையும் ஒப்படைக்கக்கோரும் ஆட்கொண்ர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அவர்களது குடும்பத்தினர்.இந்நிலையில் இன்று அதிகாலையில் ஜோதி நரசிங்கம், எழில் இளங்கோ, பாபு, கணேசன், ஜெயராமன், பாலமுருகன், ஏழுமலை, குமார் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்பட்டனர். தேவைப்படும் போது விசாரணைக்காக அழைக்கப்பட்டால் வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பே கருணாந்தி, சிதம்பரம் கும்பலின் அர்ப்ப நாட்கம் என்று பேசப்படுகிறது.
வடிவேலு சோன்னதுபோல் இன்னுமாட எங்களை நம்புறாங்க