சேர்ந்த நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுவிக்கமுடியாது என்றும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளியன்று கோதாபயவிற்கும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் நடைபெற்ற சந்திப்பிலேயே கோதாபாயவினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரியரட்னம் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.
வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்களிடம் சில விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு குறுகிய கால புனர்வாழ்வு அளிப்பதற்காகவே குறித்த புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
ஒன்று கூடும் உரிமை கூட மறுக்கப்பட்ட மாணவர் சமூகத்தின் மீதான இந்த ஒடுக்குமுறை உலக மாணவர் சமூகத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்டு ஜனநாயகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாசிஸ்ட் கோதாபயவும் அவரது இனப்படுகொலை இராணுவமும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பை மேற்கொள்ளும் நேரத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தமது தனிப்பட நலன்களுக்காக அதிகாரவர்கத்தின் அடியாட்படையாக செயற்படும் புலம்பெயர் புலி சார் அமைப்புக்கள் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த விரும்பவில்லை. இவர்களில் பெரும்பாலனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இனக்கொலை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவரப்ப்பட்டுள்ளனர்.