அதிக அளவில் நகைகளை அணியும் கலாச்சார வழமையுடைய யாழ்ப்பாண முஸ்லீம்களை இரவோடிரவாக வெளியேற்றி அவர்களிடம் புலிகளின் பணத்தேவைக்காகக் பணத்தைக் கொள்ளையிடுவதற்கான ஆலோசனை குமரன் பத்ட்மநாதனால் வழங்கப்பட்டது. 90ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமது சொந்தக் குடியிருப்புக்களிலிருந்து ஒரு இரவு கால எல்லை வழங்கப்பட்டு முஸ்லீம் மக்கள் புலிகளால் வெளியேற்றப்பாடு 20 வருடங்களாக அகதிகளாக இலங்கையின் பல பாகங்களில் வாழ்ந்து வந்தனர். பேரினவாத அரசு இன்றும் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தைத் திட்டமிட்டு சீர்குலைப்பதும் தெரிந்ததே.
வடபகுதி மக்களத் தங்க ஆபரணங்கள் அணிந்து செல்லவேண்டாம் என்று குமரன் பத்மநாதன் கூறியிருப்பதும், தமது ஆபரணங்களை இலங்கை வங்கிகளில் பாதுகாப்பாக வைப்பிடுமாறும் கோரிக்கை விடுத்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
கே.பியின் கோரிக்கையை மேற்கோள்காட்டி, வங்கிகளில் வைப்பிலிடுமாறு கே.பி கோரியுள்ளதாகவும் இதன் மூலம் தேவையான தகவல்களை அறிந்துக் கொண்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட அவர்கள் முயற்சித்து வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிறூ உதவி எண்டு புத்தகமும் கொப்பியும் கொடுத்து பேய்க்காட்டுவது,பிஸ்கெட் கொடுப்பது எண்டு இனி ஏமாற்றேலாது எண்டு நினைக்கிறன்.பெரும்பாலன தமிழருக்கு வெளீநாடுகளீல் சொந்தக்காரர் இருப்பதால் கொஞ்சமாவது சனம் யோசிக்கும் அடுத்து கேபி படித்தவர் நல்லாக சுழி ஓடத் தெரிந்தவர் ஆனாலும் இனியும் அவரது வலையில் அப்பாவித் தமிழர் சிக்குவார்கள் என நான் நம்பவில்லை.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வினையும், இலங்கையின் பொருளாதாரத்தையும்
அழித்தவ்ர்கள் யாரோ அவ்ர்கள் மூலமே தமிழரை தலை நிமிராமல்
செய்யும்
சதியின் தளபதியே கே.பி. இவர் செய்த குற்ரங்களை விசாரித்து தண்டனை வழ்ங்காவிடில் புலியின் மறுவடிவமே இவராவர். தொடர்ந்தும் தமிழரின் அழிவில்
வாழ்க்கை நடத்தும் சமூகத்தின் தலைவருமிவரேயாகும்.-துரை