மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
டைனமட் வெடிமருந்துகள் வெடித்த காரணத்தினாலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகமாக இருக்கலாம் என ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.