முதுநிலை மருத்துவர்களுக்கான நீட் கவுன்சிலிங் தாமதமாவதக் கண்டித்து டெல்லியின் பல்வேறு இடங்களில் மருத்துவ பயிற்சி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் நேற்று டெல்லியில் திடீர் பதட்டம் உருவானது.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உள்துறை அமைச்சக போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலையடுத்து இன்றூ நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவித்த அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உச்ச நீதிமன்றன்றம் வரை இன்று பேரணியாக செல்ல முயன்ற மருத்துவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கூறுகையில், “இன்றும் நாங்கள் பேரணியாக செல்ல முயன்றோம். காவல்துறையினர் தடுக்கின்றனர். நேற்று போராட்டம் நடத்திய இருக்கை மருத்துவர்களை காவல் துறையினர் தாக்கினர்,” என்று குற்றம்சாட்டினர்.
மருத்துவர்களின் போராட்டத்திற்கு டெல்லி எய்ம்ஸ் மற்றும் ராஜஸ்தான் மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருக்கை மருத்துவர்களின் போராட்டத்தினால், டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.