வவுனியா சிறைச்சாலையில் வைத்துதாக்கப்பட்டமை மூலம் படுகாயமடைந்து கடந்த 7-8-2012 அன்று உயிரிழந்த மரியதாஸ் டெல்றொக்சன் அவர்களது இறப்பு அரசாங்கத்தினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட படுகொலையாகும். இக்கொலையைக் கண்டித்தும், ஏனைய அரசியல்க் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 15-08-2012 அன்று காலை 11.00 மணிக்கு யாழ் பஸ்நிலையத்திற்கு அருகில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும்.
எனவே கட்சிபேதமின்றி இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடரும் படுகொலைகள் அடக்குமுறைகள் என்பவற்றையும் சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்தவும் இவற்றை தடுத்து நிறுத்தவும் சா்வதேச சமூகம் உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென வலயுறுத்தியும் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் காணாமல்போனவர்களது குடும்ப அங்கத்தவாகள், அரசியல் கைதிகளது குடும்ப அங்கத்தவாகள் அனைவரும் கலந்துகொண்டு இப்போராட்டம் வெற்றிபெற உதவுமாறு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
இடம்- யாழ் பஸ் நிலையம் அருகில் சோமசுந்தரப்புலவர் சிலைக்கு முன்பாக
காலம்- 15-08-2012 (புதன்கிழமை)
நேரம்- மு.ப 11.00 – 12.30 மணிவரை
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
சிறு குச்சிகலானாலும் இவைகள் தீக்குச்சிகளாக வேண்டும்