டெசோ மாநாட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எபிலி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது டெசோ மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி சென்னை பெருநகர காவல்துறை முடிவெடுக்கலாம் என்று கூறியது. ஆனால் வழக்கை முடித்து வைக்கவில்லை.
இந்நிலையில் டெசோ மாநாட்டை சென்னையில் நடத்த சென்னை காவல்துறை அனுமதி மறுத்ததை. இதைத் தொடர்ந்து டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் நேற்று சனிக்கிழமையன்று அவசர மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதி பால்வசந்தகுமார் நேற்று விசாரித்தார். இருப்பினும் நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணை நடைபெற்றிருப்பதால் தம்மால் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி தலைமை நீதிபதி இக்பாலுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து இன்று பிற்பகல் டெசோ அமைப்பாளர்களின் மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் பெஞ்ச் விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இன்று பிற்பகல் இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒய்.எம்.சி. ஏ. திடலில் டெசோ மாநாடு நடத்த சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.
கறுத்ததொப்பி,கண்ணாடி,வெள்ளைசேட்டு,சொருவியபேனா, மஞ்சள்துண்டு,சிவப்புகல்லுமோதிரம்,திருப்பிவிட்டமணிக்கூடு,இதைதாங்கும் கருணாநிதி,அதைத்தாங்கும் டெசொமாநாடு…எல்லாமே சடப்பொருளுக்குல்தான் அடங்கும்.