தமக்கு எதிரான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க கோரிய டக்ளஸ் தேவானந்தா மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை
தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1985-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது, திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1991-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கை சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த பிடியாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தன்னை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்து, தனக்கு எதிரான பிடியாணையை ரத்து செய்யவேண்டும் ” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி சூளைமேடு பொலிஸ் இன்ஸ்பெக்டர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை செசன்ஸ் நீதிமன்றம், டக்ளஸ் தேவானந்தா மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
“செத்த திருநாவுக்கரசு வந்து என்னை சுட்டால் நான் செத்துபோகிறேன்” என்று ஒரு விடுவை விட்டுப்பாருங்கள் சிலவேளை வாய்ச்சுப்போடும்…
Douglas is smart. Did you see him say in New Delhi that the 1987 Indo – Sri Lanka Accord affords him amnesty from all that happened in the past.
சட்டம் மக்களுக்காகவே ஆகயிருந்தால் டக்கிளஸ் சுற்றவாளியே!
சிறீ… தங்களின் பெறுமதியான வார்த்தைப் பிரயோகங்கள். நன்றி!.
பின்னே யாருக்காக இருக்கு சட்டம் ? ஒருவேளை கார்ல் மார்க்ஸ்க்காகவோ, இருந்தாலும் இருக்கலாம் அறிவாளி சொல்லேக்குள்ள கேக்கணும் பாருங்கோ.
அறிவு எதுவென்பதை கிரகித்துக் கொள்வதற்கும் சிறு அறிவுத்தனம் வேண்டும் திரு முஸ்!.
2009 மேமாதம் 19-ம் திகதியுடன் உள்ளாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் தமிழ் ஏழைகளின் இரத்தம் தொடர்ந்தும் ஓடாமல் தடுக்கப் பட்டதிற்கும் டக்ளஸ் தேவானந்தவின் அரசியல் பங்கு அளப்பரியது முஸ்!!. இதை முதலில் கிரகித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
What and which Thirunavukkarasu? That is also the name of the first Police Constable who laid down his life for the country of his birth.
இந்திய காவல் துறையை அனுப்பி தமிழ் இனத்துரோகி டக்கிள்ஸ் மாமாவை பிடிக்கலாம்தானே.இதே நிலமை ஒரு இந்திய மராட்டியக்காரனுக்கோ அல்லது குஜராத்திக்கோ நடந்திருந்தால், மாமா 🙂 டக்கிள்ஸ் கம்பி எண்ணி 25 வருசம் ஆகி இருக்கும். ம் என்ன பண்ண செத்தது தமிழன் ஆச்சே. இப்போ எல்லாம் நாட்டில் “போலி டாக்டர் ” அதிகம் ஆச்சுப்பா… ராசா பாத்துப் புகழுங்கப்பா..>>>
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே- ஒரு
தலைவன் வருவான் கலங்காதே.