ஈ.பி.டி.பி.யின் தலைவரும், சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு வீசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இராஜதந்திர குழுவில் அமைச்சர் தேவானந்தாவும் இடம்பெற்றிருந்தார்.
எனினும், அமைச்சரின் வீசா விண்ணப்பப்படிவத்தை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருப்பதனால் அமைச்சரது வீஸா நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக அமைச்சர் தேவானந்தாவினால் இந்த பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நண்பர்களே
திவயின பத்திரிகை எப்போது உங்களுக்கு வழிகாட்டத்தொடங்கியதோ தெரியாது
எதற்கும் பொறுத்திருங்கள்! அது சரி டக்ளஸ் தேவானந்தா சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளை எல்லாம் சந்திக்கும் போது உங்கள் இணையத்தளம் அந்த செய்திகளை மட்டும் இருட்டடிப்பு செய்யலாமோ?/
எல்லாருக்கும் புலிக்காய்ச்சல்தான்.
இது உண்மையாக இருந்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒண்றுமில்லை.
நரோந்திரமோடியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?
அவர் தான் குஜராத் இனகலவரத்தை தூண்டிவிட்டவர் வழிநடத்தியவர் என ஒரு கதை உண்டு
இந்தியாவில்லுள்ள தொலைகாட்சிகளும் பத்திரிக்கைகளும் அவரை இழிவுபடுத்தியே
நடத்தின.இரண்டாவதாக வந்த தேர்தலிலும் அவரையே தெரிவு செய்தார்கள்.அதில் முப்தைந்து
வீதமான வாக்குகள் முஸ்லீம் இனத்தவர்களுடையது.அவர் ஆட்சியில் இந்தியாவில்லுள்ள
மாநிலங்கள் முக்கில் விரலை வைத்து வியக்கும்வண்ணம் குஜரத்தை வழிநடத்தி செல்லுகிறார்
அவரும் அமெரிக்கா விசா மறுக்கப்பட்டவர்தான்.
மக்ககள் சேவையை அமெரிகக விசாவில்லிருந்து கணக்கெடுப்பது முற்றுமுழுதும் தவறரனது.