துனிசியப் போராட்டத்தைத் தொடர்ந்து அரபு நாடுகள் எங்கும் பரந்து விரியும் மக்கள் போராட்டம் இப்போது ஜோர்டான் மன்னரை நிலை குலையச் செய்துள்ளது. மக்கள் போராட்டத்தை எதிர் கொள்ளிம் நோக்கில் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, தனது அமைச்சரவையைக் கலைத்துவிட்டு புதிய அமைச்சரவை ஒன்றை உருவாக்க அழைப்புவிடுத்துள்ளார். இராணுவ அதிகாரியான மரூவ் அல் பாஹிட் இன் தலைமையிலேயே இப் புதிய அமைச்சரவை உருவாக்கப்படவுள்ளது.
ஜோர்டானில் மன்னர் குடும்பத்தினரின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் அலகாகவே பாராளுமன்றம் தொழிற்படுகிறது. புதிய மாற்றம் போராட்டங்களை நிறுத்தாது என ஜோர்டானிய செய்தி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
துனிசியப் மக்கள் போராட்டம் திசை திருப்பப்பட்டுவிட்டதாகவும் போராட்டம் தொடரும் என்றும் புத்திஜீவிகளின் கூட்டமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
எகிப்தில் அதிபர் முபாரக்கைப் பிரதியிடும் நோக்கோடு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மேற்குலகம் மறைமுகமாக ஆதரிக்கின்றது.
அரபு நாடுகளில் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை வழி நடத்தும் நோக்கில் உலக மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தலைமை வழங்க வேண்டும் என குர்தீஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை இலங்கைத் தொலைக்காட்சிகளில் இப் போராட்டங்களை காண்பிக்க வேண்டாம் என கோதாபய ராஜபக்ச உத்தரவிட்டிருப்பதாக இணைச் செய்திகள் தெரிவிக்கின்றன.