ஜேர்மனியில் பிரங்போர்ட் நகரில் 02.06.212 சனியன்று முதலாளித்துவத்திற்கு எதிரான ஆர்பாட்டம் நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட உணர்வு பூர்வமான இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜேர்மனிய போலிஸ் படை மக்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியது. அடிதடி கண்ணீர்ப் புகை மற்றும் மிளகு கலந்த எரி நீர் போன்றவற்றைப் பயன்படுத்தியது. கடன் கொடுத்து நாடுகளைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் நாடுகளைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் சர்வதேச கடன்வழங்கும் வங்கிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் முதல் பகுதியால் பல சர்வதேச வங்கிகள் இயங்கவில்லை. போராட்டம் வங்கிகளை அண்மித்து அவற்றை இயங்க முடியாயமல் நிறுத்திய வேளையில் ஆர்ப்பாட்டத்தை சனியன்று தொடர்வதற்கு அனுமதி வழங்கினர். ஐ.எம்.எப், மற்றும் வங்கிகளுக்கு எதிராக சனியன்று கூடிய கூட்டத்தைக் கண்டு மிரண்டு போன ஜேர்மனிட போலிஸ் படை வன்முறையில் இறங்கியது. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலிஸ் படைகள் திரண்டு மக்கள் மீது நடத்திய மிளகு கலந்த எரிவாயுத் தாக்குதலின் பின்னர் மருத்துவக் குழுக்கள் ஆர்ப்பாட்டக் காரர்களுக்குச் சிகிச்சையளித்தனர்.