ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று அவர்கள் மீது சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வருமான வரித்துறை உதவி ஆணையர் வழக்கு தொடர்ந்தார்.
ஊழல் பேர்வளிகளையும், பாசிஸ்டுக்களையும் ஈழ மக்களின் காவல் தெய்வங்கள் என வழிபடும் இனவாதிகள் உயிரிழந்த போராளிகளைக் கொச்சைப்படுதுகிறார்கள். ஒன்றரைத் தசாப்த காலமாக ஊழல் வழக்கைப் பின்போடும் ஜெயலலித அரச கும்பல் இந்தத் தடவை வக்கீலின் தாயாரைக் காரணம் காட்டுகிறது.
இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி தட்சணாமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா சார்பில் வக்கீல் அசோக்குமார் ஆஜராகி, ‘ஜெயலலிதா சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் குமாரின் தாயார் மரணமடைந்து விட்டார். இதனால், அவர் வருகிற ஜூன் 1–-ந்தேதி வரை வழக்கு விசாரணைக்கு ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 3–-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி தட்சணாமூர்த்தி உத்தரவிட்டார்.