தமிழ் இனவாதிகள் ஜெயலலிதா மாறிவிட்டார் என அவரின் பின்னால் அணிதிரண்ட அவமானகரமான அண்மித்த காலங்களின் பின்னர், ஜெயலலிதா மறுபடி மாறிவிட்டார் என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை தமிழக முதல்வர் ஜெயலிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகிறது.
பிரசாத் காரியவசம் கடந்த செவ்வாய்கிக்கிழமை கொழும்பிலிருந்து, இந்தியா திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக பிரதமர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கொலைக்களம் ஆவணத்திரைப்படத்தை அடிப்படையாக வைத்து தமிழக முதலமைச்சர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியொன்றை வழங்கத் தயாராகிறார்.
Thursday, July 7, 2011, 11:12
இந்தியா, உலகம்
செனல் 4 நிறுவனத்தின் கொலைக்களம் ஆவணத்திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டியொன்றை வழங்க தயாராகி வருவதாக சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செனல் 4 நிறுவனம் வெளியிட்ட கொலைக் களம் ஆவணத் திரைப்படம் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழக முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் அது பாரிய அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை இந்தியாவிற்கான இலங்கைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
இலங்கை அரசிற்கு நெருக்கடியும் பொருளாதாரத்தடையும்கொடுப்பதால் சிங்கள அரசும் சிங்களவ்ர்கள் மட்டும்தானா பாதிக்கப்படப் போகின்றார்கள்? அங்கு தமிழர்
வீடுகளிலெல்லாம் தேனும்பாலுமா ஒட்டுகின்றது? தமிழகத்தில் வறுமையில் வாழும் மக்களிற்கு வாழ வழிகள் எல்லாம் செய்து விட்டாரா இந்த ஜெயா? தமிழகத்திலும், இலங்கையிலும் வறுமையில்வாழும் மக்களிற்கு அடுத்த வேளை உணவிற்கு வழிகாட்ட யாருமில்லை. தமிழக அரசியல் வாதிகளிற்கும்
புலம்பெயர் சில உல்லாச அகதிகளிற்கும் தமிழை விட்டால் பிழைப்பிற்கு வேறு வழியுமில்லை.-துரை
உண்மை. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை என்று கூச்சலிடும் தமிழ் திரைப்பட துறை “இனிமேல் இலங்கைக்கு தமிழ் பாடல்கள் , திரைப்படங்களை ஏற்ற்று மதி செய்ய மாட்டோம் ” என்று கூறுவார்களா.?.