தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தி சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகி வருகிற கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா நேற்று தனது கர்நாடக அட்வகேட் ஜெனரல் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்
ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்கி செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜாராகாமல் இருப்பதற்கு வசதியாக அரசு சிறப்பு வழக்குரைஞர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு மாநில அரசு என்னை நிர்பந்தித்தது.
ஜெயலலிதா கூட்டுவைத்துள்ள பார்ப்பன மத அடிப்படை வாதக் கட்சியான பாரதீய ஜனதா மேலிடமும் அதே கருத்தை கொண்டிருந்ததாகவும், அரசு சிறப்பு வழக்குரைஞர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு வற்புறுத்தியதாகவும் அறிந்தேன்.”