ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள யோசனை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கையிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களுடன் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்படவில்லை என்பதால் அந்த பிரச்சினையில் வெறுமனே தலையிடும் அவசியம் முஸ்லிம் காங்கிரஸூக்கு இல்லை என அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை என்ற கண்துடைப்பு தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்களுக்கான விடுதலை அல்ல எனினும் முஸ்லிம் காங்கிரசின் இத்தீர்மானம் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள தேசிய இனங்களிடையேயான ஒற்றுமைக்கு மைற்கல். ஹம்பாந்தோட்டை நிலப்பிரபுத்துவ ரவுடியான மகிந்த, அவருக்கு எதிரான சட்டத்தரணியைக் கத்தியால் குத்திக்கொன்ற கொலை, பிற்காலத்தில் அவரைப் பேரினவாதத்தின் தலைவராக்கியது. முள்ளிவாய்க்காலில் சில இரவுக்குள் அமெரிக்க ஐரோப்பிய அரசுகளதும், இந்திய அரசினதும் துணையோடு ஒரு லட்சம் மக்களைக் கொன்றுகுவித்தார். இன்று இஸ்லாமித் தமிழர்களுக்கு எதிரான மகிந்த அரசின் பாசிசக் குழுக்கள் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இனச்சுத்திகரிப்பை எதிர்கொள்ள வேண்டிய மக்கள் போராட்டத்தை அவர்கள் கட்டமைக்கவேண்டும். ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுடன் இணைந்தே அதனைச் சாதிக்க முடியும்.
Based on past history I can say with some confidence that they will change their stance for a few concessions just before the UN meets.