ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், சீனா, ரஷ்யா, கியூபா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
4 அமைச்சர்களை கொண்ட குழு நேற்று முன்தினம் ஜெனிவா நோக்கி புறப்பட்டுச் சென்றதுடன், அவர்கள் ஐக்கிய நாடுகளின் சபையின் தூதுவர்களை சந்தித்து பேரங்களில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு புறத்தில் அமரிக்கா தலைமையிலான சமூக விரோத ஏகாதிபத்திய நாடுகளும் மறு புறத்தில் புதிய ஏகாதிபத்தியங்களாகவும் உள்ளக சர்வாதிகாரிகளாகவும் உருவாகியுள்ள சீனா ரஷ்யா போன்ற நாடுகளும் இலங்கை மக்களைப் பந்தாடத் துடிக்கின்றன. அரசியல் தலைமையற்ற தமிழ்ப்பேசும் மக்கள் சந்தர்ப்பவாத அரசியல், ஊடக வியாபாரிகளால் மேலும் ஏமாற்றப்படுகின்றனர்.