Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஜெகத் கஸ்பர் புலத்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இனியொரு... by இனியொரு...
02/04/2010
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

சமீபகாலமாக கருணாநியின் ஆதரவு ஊடகமான நக்கீரன் இதழில் மறக்க முடியுமா என்னும் பெயரில் தொடர் எழுதிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவப் பாதிரியான ஜெகத் கஸ்பர் ஈழ மக்களுக்கு தற்போது தலைமை இல்லை என்றும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு வீச்சோடு புலம் பெயர் மக்களின் நிதி உதவியோடு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதி வருகிறார். இந்த நபரின் காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தொடர்புகளும், அது எப்படி புலிகளை கடைசி நேரத்தில் கழுத்தறுத்தது என்றும் தொடர்ந்து தமிழகத் தோழர்கள் இவரை அம்பலப்படுத்தி எழுதி வருகிறார்கள். இறுதிப் போரின் போது புலிகளை சரணடைய வைத்துக் கொன்றது. சென்னை சங்கமம் என்ற பெயரில் பெரும் பண்க்கொள்ளை என்று இவரின் போக்கிரித்தனமான பண வெறியும் அதற்கான உளவு வேலைகளும் தொடர்ந்து வந்தாலும் இவர் மீண்டும் மீண்டும் ஈழம் என்பதை குறிவைக்கிறார். காரணம் ஈழ மக்களுக்கான ஒரே நிதி உதவி ஆதாரமாக இருக்கும் புலத்து மக்களை நிவாரணம் என்ற பெயரில் ஒருங்கிணைத்து பெரும் பண வசூலை போடத்தான் என்று தகவல்கள் தெறிவிக்கின்றன. தமிழகத்தின் பிரபலாமான புலி ஆதரவு இயக்குநர் ஒருவரோடு சேர்ந்து இதே விதமான நிதி திரட்டலுக்கு ஜஸ்டிஸ் ஃபண்ட்‘ என்ற பெயரில் நிதி திரட்டலாம். அதற்கு அந்த இயக்குநருக்கு ஈழ மக்களிடம் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என்று இவர் முயன்றிருக்கிறா. அந்த இயக்குநர் சிறையில் இருந்த தருணத்தைப் பயன்படுத்தி அவரது நெருங்கிய புலி ஆதரவாளர்களிடம் இந்த பாதிரி வசூலைத் தொடங்க முயர்சித்திருப்பதும் தெரியவருகிறது. இப்போது தானும் ஏற்கனவே புலத்தில் புலிகளுக்காக வசூலிக்கிறோம் என்று வயிறு வளர்த்த வசூல் ராஜாக்கள் சிலருடன் சேர்ந்து ஈழ மக்களுக்கான நிவாரணம் என்ற பெயரில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தப் பாதிரி களம் இறங்குவார் என்று தெரிகிறது. அன்பார்ந்த புலத்து மக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் ஈழத்தில் துயரப்பட்டு நிற்கும் மக்களுக்கு உதவும் கடமை உண்டு. ஆனால் அதை எந்த தன்னார்வக்குழுக்கள் மூலமாகவோ, இம்மாதிரி மோசடிப் பாதிரிகள் மூலமாகவோ செய்யாதீர்கள். நேரடியாக நீங்களே ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்து நேரடியாக உங்களின் உதவிகள் அவர்கலுக்கு கிடைக்கும் படிச் செய்யுங்கள். அதுவே பயன் தரும். மற்றபடி ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தை எடுத்து சுவைக்க நினைக்கும் உளவாளிகளுக்கும், போலிகளுக்கும் நீங்கள் கடினப்பட்டு உழைக்கும் பணத்தை வழங்காதீர்கள். உங்களை நம்பவைக்க பல விதமாய் பேசும் இந்தப் பாதிரியை இனம் கண்டு உங்களின் எதிர்ப்பைப் பதிவு பண்ணுங்கள். அரசியல் ரீதியாக நமக்குள் ஆயிரம் பிளவுகள் இருக்கலாம். ஆனால் இம்மாதிரி சூதாடிகளை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது அப்படி அனுமதுப்பது நாமே நமது மக்களுக்கு கொள்ளி வைப்பது போலாகிவிடும். சமீபத்தில் நக்கீரன் இதழில் களத்தில் நிற்கும் போராளியின் நேர்காணல் என்ற ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மிகவும் இருண்மையான அந்த நேர்காணல் “கேள்வியும் நானே பதிலும் நானே” என்கிற கருணாநிதியின் பாணியில் ஜெகத் கஸ்பரால் எழுதப்பட்டிருக்கலாம். அதில் தான் செய்த துரோகத்தை மறைக்க புலிகள் மீதே பழியைப் போடுகிற திருப்பணியை ஈழக் குரலிலேயே பேசும் அயோக்கியத்தனத்தையும் செய்யத் துவங்கி விட்டார் இந்தப் பாதிரி. அல்லது உண்மையிலேயே ஏதாவது ஒரு ஈழக் குரலிடம் எடுத்திருக்கலாம். ஆனால் அதை நாம் எப்படி நம்புவது. இந்திய உளவுப் படையின், போர் வெறியன் சிதம்பரத்தின் கைக்கூலியாக புலிகளுக்குள் ஊடுறுவி உளவு வேலை பார்த்த இவரிடம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

லுமூம்பா திரைப்படமும் - கலந்துரையாடலும்!: தேடகம்-கனடா.

Comments 6

  1. thamilmaran says:
    16 years ago

    விலையாட்டில் தோற்கிறபோது இடுப்புவலி. தோள்ப்பட்டை வலி என்றூ போலிக் காரணம் சொல்லும் விலையாட்டு வீரன் போல் இப்போதுநமக்கு ஒரு காரணம் தேவை அது இந்த பாதிரியார்,முள்ளீவாய்க்காலில்நின்றூம் அறீக்கை விடுகிறார்கள் என்றூ சண்டைக் காலத்தில் பெருமைப் பட்டவர்கள். இப்போது போர் வெறீயன் என் சிதம்பரத்தை சொல்வது ஏன்? சமாதனத்திற்கான வழிகள் திறக்கப் பட்டபோது அதை மறீத்துநின்றூ சண்டை போட்டது யார்? பெண்கள்,குழந்தைகள் என்றூ கொல்லப்பட்டபோதெல்லாம் அவர்கலை கேடயமாக பயன் படுத்தியது யார்.எங்கட தேசியத் தலைவரின் தீர்க்க தரிசன் வெல்லும் என்றூ அந்த மனுசனையும் சிந்திக்காது தடுத்தவர்கள் யார் சிதம்பரமா?இப்போது கலைஜரையும் சிதம்பரத்தயும் குற்றம் சுமத்துபவர்கள்தான்.புத்தராகவும்,யேசுவாகவும் வேடம் போட்டுக் கொண்டு, உண்மைகலைக் கொன்றூ தமிழரை முன்னேற்றூகிறார்கலாம்.வேடதாரிகலே உங்கள்
    வேடத்தை கலைக்கும் வேலை வந்து விட்டது.

  2. anti jegath says:
    16 years ago

    ஜெகத் ஈழப் போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் மையம் சார்பில் நினைவஞ்சலி ஏற்பாடு செய்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் இன்னமும் நீங்கள் ஜெகத்திடம் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
    சென்னை சங்கமத்தில் ஜெகத் கஸ்பர்

    அந்த மாவீரர் நாளில் அவர் மத்திய அமைச்சரும் ஈழப் போராட்டத்தில் புலிகளை ஒழித்தேக் கட்டுவது என்று கங்கணம் கட்டி செயல்பட்டவருமான சிதம்பரம் அவர்களின் மருமகளான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டிய நிகழ்ச்சியை தனது தமிழ் மையம் சார்பில் சென்னையில் நடத்தியிருக்கிறார். அதில் சிறப்பு விருந்தினராக சிதம்பரமே கலந்து கொண்டிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் அப்பாயின்ட்மெண்ட் வேண்டும் என்றால் அது பல மாதங்களுக்கு முன்பே வாங்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர் நிகழ்வில் கலந்து கொள்வது சாத்தியம். ஆக மாவீரர் தினத்தில் உள்ளூர் மாவீரனான ஜெகத், சிதம்பரத்தின் மருமகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றியது தற்செயலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பதற்கான பதிலை நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்களை உலக உளவாளி என்று நக்கீரனில் எழுதுவார்.

  3. anti jegath says:
    16 years ago

    வரலாற்று சிறப்பு மிக்க தமிழின துரோகி பட்டியலில் இவனுக்கு முக்கிய இடம் உண்டு. நமது என்ணம் எல்லாம் இனியும் தமிழர்கள் இவனிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் . இவனை பற்றி மேலும் அறிய கிழ்கண்ட முகவரியை சொடுக்கவும்.
    http://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/

  4. JAMES FREDRIC says:
    16 years ago

    பணம் ,பணம் எற்று முக்கியமான காலகட்டத்தில் மூக்கு நுனியில் வைத்துக்கொண்டு,விவாதம் செய்கிறீர்கள்!.உலக பொருளாதார வீழ்ச்சி துவக்கத்தில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11%.தற்போது 4%.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே,வட இந்தியாவில் கோயிலில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர்கள் கலைஞர் மு.கருணாநிதியை திட்டுவார்கள்!,தனக்கு தமிழன்(மதராஸி) என்பதற்காக பிச்சை போடமாட்டேன் என்கிறார்கள்,அதற்கு கருணாநிதியின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்தான் காரணம் என்று!.வெளிநாடு வந்துவிட்டால் நமக்கு “தலித்துக்களின்” மீது பரிதாபம் ஏற்படுவது என்பது வேறு,இடம்,பொருள்,ஏவலான “சொல்லாடல்களை” சரியாக நியமிப்பது வேறு.”ஜாதி விஷயங்களில்” கறாராக இருக்கும் வட இந்தியர்கள்,ஒரு “பற தமிலு ராஜாவை” ஐ.டி. அமைச்சராக அனுமதித்ததன் மூலம்,”தென்னிந்தியர்களின் ஐ.டி. மீது” எவ்வளவு வெறுப்பு வைத்துள்ளனர் என்று புலப்படும்.இது பிரிட்டிஷார் கொடுத்த திராவிட அடையாளமல்ல!,அதை ஒட்டிய புத்தம் புதிய அமெரிக்க மூலத்தை உடைய இந்திய பொருளாதார சிக்கல்.ஒரு பில்லியன் டாலர் என்பது ஆயிரம் மில்லியன் டாலர்.ஒரு சில தனி நபர்களிடம் பல பில்லியன் டாலர்கள் தற்போது புழங்குகிறது.நிச்சயமாக சில தமிழர்கள் இவர்களின் வளர்ப்பு பிராணிகளாகத்தான் இருக்கிறார்களே தவிர,பில்லினேயர்கள் இல்லை.ராஜீவ் காந்தி கொலை,முள்ளிய வாய்க்கால் இதற்கு உதாரணம்.இதில் மதங்களின் பேரை சொல்லும் தமிழ் என்.ஜி.ஓ.க்கள் தெரு நாய் மாதிரி.இதன் மூலம் நடிகைகளுக்கு,இந்து முறைப்படி?(இந்திரன் – ரம்பா) ஒரு கோடிக்கு மோதிரம் போடலாம் – என்ன விளையாட்டு இது!.விஷ்யம் அறிந்தவர்களுக்கு தெரியும்,சென்னையில் கலைஞர் குடும்பம் உட்பட,”ஜாக்பாட் அடித்தது போல்” பணம் குவிந்தது முதலீடு செய்யவரும் வெளி நாட்டு உற்ப்பத்தி கர்ப்பரேட்டுகளுக்கு தரிசு நிலத்தைக் கூட,பலகோடிகளுக்கு பலமடங்காக விற்ற பணம்தான்.தாராள மயமாக்கல் கொள்கையினால் லோக்கல் கிரிமினல்கள் அடித்த “ஜாக்பாட்” இது.தற்போது பொருளாதார சிக்கலால் படுத்துக் கொண்டு வருகிறது.உலக பொருளாதாரத்தில் “ஹோல்டிங் கம்பெனிகள்”,”ஹெட்ச் ஃபண்ட்” என்பன,முதலீட்டு துறையில்,உற்பத்தி பொருள்களின் மீது அறிவோ,தொடர்போ இல்லாமல் வெறும் பணம்,ஃபாண்டு பத்திரங்கள் மூலம் “சூது விளையாடி” பல கம்பெனிகளின் முதலாளியாகலாம்.இது ஒரு பொருளாதர “கேன்சர்”.இது போன்ற பல சிக்கலான விஷயங்கள்,பொருளாதார நிர்வாகத்தில்,காலஓட்டத்தில் தவிர்க்கமுடியாத,அதே சமயத்தில் ஒரு எய்ட்ஸ் போன்றது.இதனால் புற்றுநோய் போன்று பல பில்லினேயர்கள் ,கலாச்சார தளமின்றி உருவாக வழிவகுக்கிறது.இவர்களின் “தங்கள் இருப்புக்கான விளையாட்டை”இயங்கியலாக மதிப்பிடலாம்!.ஒரு கலாச்சார தளத்தின்படி பிரச்சனையை முன் வைக்காமல்,பணத்தை மூக்கின் நுனிமீது வைத்து, புளுத்துப் போய் ஓடி திரிந்ததால்,இந்த இயங்கியல் சக்கரத்தில் நசுக்கப்பட்டதே “வன்னிமக்களின் முள்ளிய வாய்க்கால்!”.

  5. துரோகி says:
    16 years ago

    இந்த மனிதர் மேல் ஏராளாமான புகார்கள் இருக்கிறது. திமுக, கனிமொழி ஆதரவு என்று இருப்பதால் இவரை யாரும் கேள்வி கேட்கத் தயங்குகின்றனர். எச்சரிக்கையைச் செய்தியை வெளியிட்ட இனியொரு விற்கு நன்றி

  6. மதி says:
    16 years ago

    இவர் ஆக்டபஸ் மாஹ்டிரி எங்கே எப்படி யாரைப் பிடித்தால் பணம் கிடைக்கும் என்கிற உண்மை தெரிந்து தந்திரமாக அணுகு பணம் க்றக்கிறார். தன்னைப் பற்ரி தானே புகழ்வதுதான் இவரது வேலை. ஐடி இளைஞர்களை ஒருங்கிணைத்து கிறிஸ்துமஸ் அன்று டிஸ்கொதே நிகழ்வை நடத்தி அதில் பணக்காரர்களை ஆட விட்டு. அங்கே ஒரு ஐந்து நிமிடம் ஈழம் பற்றி பேசலாம். ஆவ்ர்களை ஈழத்துக்காக ஒருங்கிணைக்கலாம் என்றாராம்.இவரடு பேச்சைக் கேட்ட ஐடி இளைஞர்களோ ஈழத்துக்காக டிஸ்கொதேவா? இவன் சரியான கேடியா இருக்கானே? என்று தெரிச்சு ஓடுனாங்களாம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...