புலம்பெயர் நாடுகளின் ஊடகங்களை தென்னிந்திய களியாட்ட நிகழ்வுகள் ஆக்கிரமித்து அவற்றைக் கலாச்சாரமாக மாற்றி வருகின்றன. ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் புலம்பெயர் அரசியல், பிழைப்புவாதிகளின் கைகளில் சிக்கிச் சிதைக்கப்படுகின்றது. தமக்கென மக்கள் சார்ந்த அரசியல் தளமற்ற புலம்பெயர் ஊடகங்கள் களியாட்டங்களை தென்னிந்திய சினிமாக் களியாட்டக் கலாச்சாரத்தை உள்வாங்கி வினியோகிக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் ஜீ.ரி.வி என்ற புலம்பெயர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் என்ற அரசியல் உரையாடல் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிச்சம் நிகழ்ச்சியை நடத்தும் ஊடகவியலாளர் தினேஷ் எந்த நிகழ்ச்சியிலும் தலைகாட்டுவதில்லை. இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக தினேஷிடம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. வேறு சில மூலங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாதக் கணக்கில் ஜீ,ரி.வி ஊதியம் வழங்காமையினால் தினேஷ் நிகழ்ச்சிகளை நிறுத்திக்கொண்டார் என்று தெரியவருகிறது.
இதேவேளை ஏனைய உல்லாச மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவோர் முறிவின்றி தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். தமது நீண்டகாலப் பணியாளர் ஒருவருக்கு இத் தொலைக்காட்சி ஊதியம் வழங்கவில்லை என்ற தகவல் அவமானகரமானது. இதைத் தவிர சரி தவறு என்பதற்கு அப்பால், நடைபெறும் அரசியல் நிகழ்ச்சிகளை தமிழ்த் தேசிய ஊடகம் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஜீரீவி புறக்கணிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கு இச்சம்பவம் உதராணம்.
அரசியலை விட களியாட்டங்கள் அதிக வருமானம் தரும் நிகழ்வாகிவிட்டது.
அன்று மேற்குலகத்தமிழரின் கண்ணில் கண்ணீர் சிந்த நிகழ்ச்சி செய்த
தொலைக்காட்சிகள் இன்று மேற்குலகத்தமிழரின் பொழுது போக்கு
ஊடகமாக மாறிவிட்டன. தமிழ்தேசியம் என்றால் சந்தர்ப்பத்திற்கேற்ர
கொள்கையும் காலத்திற்கேற்ர வியாபாரமுமேயாகும்.
தமிழ் தேசியம் , வியாபாரம் , மேற்குலகு , , புலிப்பினாமி , பாசிஸ்டுகள் இப்படி சில சொற்களை வைத்தே உங்கள் காலத்தை ஒப்பேற்றி விடுவீர்கள் போலிருக்கிறதே >
நீர் ஏதாவது புதிதாக சொல்லும்.
சொல்கிறேனே . பின்னூட்டங்களை படிப்பதில்லையா ??
தினேஷ் ஜிடிவி யிலிருந்து காணாமல் போவதும் பின்பு வருவதும் சாதாரணமாக அடிக்கடிநடப்பதுதான் .
முன்பும் இப்படித்தான் திடீரென நிகழ்ச்சிகளிலிருந்து காணாமல் போனார் .
உடனே தினேஷ் எங்கே என தேட ஆரம்பித்தீர்கள் .
பின்பு ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் நிகழ்ச்சியில் தோன்ற ஆரம்பித்தார் .
எங்கே பிழை பிடிக்கலாமென கண்ணுக்குள் விளைக்கெண்ணெய் விட்டு தேடுபவர்களுக்குத்தான் இதெல்லாம் செய்தியாகிறது ..
புலம்பெயர் தமிழரையும் இலங்கை அரசியலையும் மூலதன்மாக
வைத்து வியாபாரம் செயவோரையும் அதற்கு ஒத்தாசையும்
விளம்பரமும் செய்யும் தொலைக்காட்சிகளையும் பற்ரி விவாவதிக்க
வாருங்கள். சில ஊடகவியலாளர்கள்,ஊடகங்கள் தமிழ் மக்களை
தங்கள் சுயநலனிற்காகவும், பணத்திற்காகவும் தவறான வழியில்
கொண்டு சென்றுள்ளன. இதுவே இலங்கைத்தமிழரின் இன்றைய
நிலமைக்கு முக்கிய காரணம்.
இவவாறான ஊடகங்கழும் , ஊடகவியலாளர்கழும் சொல்லி கொடுப்பதை
சொல்லும் கிளிகள் போன்றவையே.
போன தடவை தினேஷ் கணாமல் போன போதும் இப்படித்தான் ஒப்பாரி வைத்ததாக நினைவு.
அப்படி ஏ தாவது நடந்திருந்தால் அதனை தினேஷ் தான் சொல்ல வேண்டும் .
அதை விடுத்து , தினேஷின் பினாமியாக ஊடகமோ , தனிநபர்களோ அவசரகுடுக்கை தனமாக புலான்ய்வு செய்து செய்திகளை வெளியிடுவது அதிகபிரசங்கித்தனம்.
I am surprised when I hear the news of Thinesh missing from GTV. As someone said above, it has become a pattern for Thinesh to appear and disappear along with ‘Velichchem’ program. It is also same with Jegan who comes and goes. Could there be any connection to this ‘game’? For me, Thinesh is one of the best journalist and his path is moderate and acceptable by people with any political belief or background. Will GTV take care of this and bring back Thinesh and his most sought program ‘Velichcham’
தினேஷ் ஐ விட்டால் புலம்பெயர் ஊடகத்துறையில் புத்திசீவிகள் யார் இருக்கிறார்கள்? பிபிசி ஊடகத்தார் கூட தினேஷ் அளவுக்கு அரசியல் தெரிந்தவர்கள் இல்லை. பல் விடயங்களை நடுநிலையாக வெளிக்கொண்டு வருபவர். உலக விடயங்களை விளங்கி வைத்துள்ளாமிழகத்தில் இருந்த்து கூட புத்திசீவிகளை டயாஸ்போராவுக்கு அறிமுகம் செய்தவரெ.
தமிழ்தேசியம் என்றால் சந்தர்ப்பத்திற்கேற்ர
கொள்கையும் காலத்திற்கேற்ர வியாபாரமுமேயாகும்.