டோக்கியோ, ஜூலை 6-
பணக்கார நாடுகளின் ஜி-8 உச்சி மாநாடு நடக்க உள்ள ஜப்பானில் ஸப் போரோ நகரில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடை பெற்றது. சனிக்கிழமை நடந்த இந்த பேரணியில் உலகின் பல்வேறு பகுதி களிலிருந்தும் வந்திருந்த உலகமய எதிர்ப்பாளர் களும் விவசாயிகள், மாண வர்கள் ஆகியோரும் அணி வகுத்தனர்.
திங்களன்று உச்சி மாநாடு துவங்குகிறது. பேரணி ஆர்ப்பாட்டத் தைக் கண்டு பயந்து ஸப் போராவில் கடும் பாது காப்பு போடப்பட்டுள்ளது. 21,000 பாதுகாப்புப் படை யினர் நிறுத்தப்பட்டுள்ள னர். கடந்த ஆண்டு ஜெர் மனியில் நடந்த ஜி-8 உச்சி மாநாட்டின் போது பெரிய அளவிலான கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற் றன. முன்னெச்சரிக்கை நட வடிக்கை என்ற பெயரில் ஜப்பான் பலருக்கும் நாட் டிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
உணவு உற்பத்தி விஷயத் தில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென்று எழுதப்பட்ட பதாகைக ளுடனும் கோஷங்களு டனும் பேரணியினர் அணி வகுத்தனர். உணவு விலை உயர்வுக்கும் புவி வெப்ப மயமாதலுக்கும் ஜி-8 உறுப்பு நாடுகள்தான் கார ணம் என்று பேரணியினர் குற்றம் சாட்டினர்.