அறுபது ஆண்டுகளாக சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு என்ற மனித அவலங்களூடாகப் பயணம் செய்யும் ஈழத் தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டுத் தளம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பாலியல் வக்கிரங்களையும், மனிதர்கள் மீதான கோரமான வன்முறைகளையும், சாதீய மேலாத்திக்கத்தையும் அடிப்படையாக முன்வைத்துப் பின்னப்படும் தென்னிந்த சினிமாக் குப்பைகளையும் கடந்து மக்கள் சார்ந்த கலையை வளர்த்த வரலாறு ஈழத் தமிழர்களுக்கு உண்டு. தென்னிந்திய பொழுதுபோக்கு வக்கிரங்களோடு போட்டிபோட்டுக்கொண்டு உயிர்வாழ்ந்த சஞ்சிகளையும், கிராமிய நாடகக் கலைகளையும் மக்கள் சார்ந்து வளர்த்த ஆயிரம் கலைஞர்களை ஈழத்தில் இனம்காண முடியும்.
வலிசுமந்த புலம் பெயர் தேசத்தில் தேசியத்தின் பெயரால் வியாபாரமாக்கப்படும் தென்னிந்திய சினிமாச் சாக்கடைகளை ஈழத் தமிழ்க் கலாச்சாரம் என்று புதிய சந்ததிக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
தமிழ் நிகழ்ச்சிகளை அரைகுறை ஆங்கித்தில் நடத்தி வியாபாரப்படுத்தும் தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சிகளை போர் தின்ற சமூகத்தின் பண்பாடாக்கிக்கொள்கிறோம்.
தென்னிந்தியத் தொலைக்காட்சிகளை புலம் பெயர் தமிழர்களுக்கு கலை என அறிமுகப்படுத்தும் ஐங்கரன் நிறுவனத்தின் பொங்கல் வெளியீடுகள் வீரமும் ஜில்லாவும்.
ஐங்கரன் நிறுவனத்தின் தலைவர் இனப்படுகொலை நிகழ்த்திய விமானப்படை விமானத்தில் இலங்கையில் சென்றிறங்கிய காட்சிகள் இன்று வெளியாகியிருந்தன.
வன்முறைகளை கலாச்சாரமாக்கும் ஜில்லாவும் வீரமும் போன்ற நூற்றுக்கணக்கான அழுக்குகள் ‘தேசியத்தின்’ பெயரால் புதிய புலம் பெயர் சந்ததியின் மீது திணிக்கப்படுகின்றன. இந்தச் சதியின் பின்னால், அருவருப்பான வியாபார வெறியின் பின்னால் இந்திய இலங்கை உளவுத் துறைகள் செயற்படுகின்றனவா என்பதெல்லாம் ஆதாரங்களற்றவை. அவை செயற்பட வாய்ப்புண்டு என்பது அனுமானங்கள்.
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்
May be partmership with Sun Pictures… ‘Inkaran’ Karunananthamoorthy wants to shoot another film in Jaffna…
ஐன்கரன் யாழ்ப்பாணத்திலும் படமெடுத்து ஓடப்போகிறார் என்று கதை. இவர் புலம் பெயர் புலிகளுடன் மேடைகளில் தோன்றி இருக்கிறார். 2000 இற்கு பிறகு புலிகள் அரை வியாபார நிறுவனமாக மாறியது. இப்போ புலி என்று சொல்லும் நூறுவீதமானவர்களும் வியாபாரிகளே. திருட்டு வியாபாரிகள் அவர்களே.