05.09.2008.
ஜார்ஜியாவை நோக்கிச் செல்லும் அமெரிக்காவின் மூன்றாவது கப்பல் துருக்கி வளைகுடாவைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தெற்கு ஒசெட்டியா மீதான ஜார்ஜியாவின் தாக்குதலை ரஷ்யா எதிர்த்து முறியடித்து விட்டது.
இந்நிலையில் இப்பகுதி யில் ஏற்பட்டுள்ள பதற்ற மான சூழ்நிலைமையை தனக்குச் சாதகமாக்கி இங்கு தனது ராணுவத்தை நிலை நிறுத்த அமெரிக்கா முயற் சிக்கிறது.
மருத்துவ உதவி செய் வதற்காக என்று கூறிக் கொண்டு அமெரிக்க போர்க் கப்பல்கள் ஜார்ஜியா கடற் கரைக்கு வருகின்றன.
இப்பகுதியில் ‘நேட்டோ’ ராணுவக் கூட்டணியின் போர்க்கப்பல்களின் எண் ணிக்கை அதிகரிப்பதைக் கடுமையாக எதிர்ப்போம் என்று ரஷ்ய பிரதமர் விளா டிமிர் புடின் செவ்வாயன்று தெளிவுபடுத்தினார்.