24.08.2008.
ஜார்ஜியாவுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றி சென்றுள்ள அமெரிக்க போர் கப்பல் ஜார்ஜிய துறைமுகமான பட்டுமீயில் நங்கூரமிட்டுள்ளது.
இந்த மாதத்தின் முற்பகுதியில் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்ட பின்னர் ஜார்ஜியா செல்லும் முதல் நிவாரணப் பொருட்கள் இவை. இந்தக் கப்பலில் போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் உள்ளன.
ஜார்ஜியாவுக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதை அமெரிக்கா காட்டும் செயல் இது என டிபிலிசியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.
முன்னதாக ஜார்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திய பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி, உடனடியாக ஜார்ஜியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ரஷ்ய துருப்பினரை வெளியேற்றுமாறு ரஷ்ய அதிபரிடம் கூறியுள்ளார்.
BBC.