இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்தியதகக் கூறப்படும்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கனிமச் செல்வம் செழிக்கும் ஜார்கண்ட் மானிலத்தில் பழங்குடி மக்கள் மீது பல்தேசிய நிறுவனங்கள் நடத்தும் கொள்ளைக்கு எதிராக மாவோயிஸ்டுக்கள் பழங்குடி மக்களுடன் இணைந்து போராடிவருகின்றனர். ஜார்கண்ட் மாநில போலிஸ் பேச்சாளர் அனுராக் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில் ஐந்து போலிசார் தாக்குதலில் உயிரிழந்தனர் என்றார்.
நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு முடிவுக்கு வந்து அரை மணிநேரத்தின் பின்னர் தேர்தல் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது நிலக் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.