ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் முகமது யாசின் மாலிக் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் பல பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
பிரிவினை கேட்டு போராடும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் (ஜே.கே.எல்.எப்.) நிறுவனர் முகமது மக்பூல் பட்டின் 26-வது நினைவு தினத்தையொட்டி வியாழக்கிழமை பொதுவேலை நிறுத்தத்திற்கு இவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அபி-குஷார் பகுதியில் போராட்டம் நடத்த இருந்த பஷீர் அகமது பட், நூர் முகமது உள்ளிட்ட ஜே.கே.எல்.எப்.பின் ஆதரவாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர் என போலீஸôர் தெரிவித்தனர்.
ஜே.கே.எல்.எப். அமைப்பினர் சராய் பல்லாவில் பேரணி நடத்த இருந்ததையடுத்து அந்தப் பகுதியின் அனைத்து நுழைவு வாயில்களிலும் போலீஸôர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு அங்கு போராட்டக்காரர்கள் நுழைய முடியாதபடி தடை செய்யப்பட்டது.
ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் மிர்வய்ஸ், உமர் பரூக், ஆஹா சையத் ஹஸன், புட்காமி பிலால், கனிலோன், ஷாகித் உல் இஸ்லாம், ஜாபர் அக்பர் ஆகியோரை அவர்களுடைய வீட்டிலேயே போலீஸôர் சிறைவைத்தனர்.
பிரிவானை இயக்கத்தலைவர்களின் ஸ்டிரக் அறிவிப்பால் காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான போலீஸர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைகளின் நுழைவுவாயில், சுற்றுலாத் தலங்களின் வாயில்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடைகள், வியாபார ஸ்தலங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நீதிமன்றங்கள், தனியார் அலுவலகங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.