பூகம்பத்தாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையாலும் செயலிழந்த ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் கூறியுள்ளார்.
நய்ரோபியில் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் யூகியோ அமனோ, ஆபத்தான இந்த நெருக்கடியை ஜப்பான் தனியாக சந்நதிக்கவில்லையென்றும், அதோடு உலக நாடுகள் அனைத்தும் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
அணு உலைகள் செயலிழந்ததால் நிகழ்ந்துவரும் அணுக் கதிர் வீச்சை கட்டுப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமைக்கு அனைத்து உதவிகளும் செய்ய ஐ.நா.தயாராக உள்ளது என்று பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளதாகவும் அமனோ தெரிவித்துள்ளார்.
இதே வேளை இந்தியா போன்ற நாடுகளில் ஜப்பானை விட மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் காணப்படும் அணு உலைகள் குறித்து முன்னெச்சரிக்கைச் செயற்பாடுகள் குறித்து இதுவரை பேச்சளவில் கூட உரையாடல்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.