அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆகியோருக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை வெளியிடவேண்டாம் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சிரேட் ட அதிகாரி, கூட்டம் தொடர்பான செய்தி சேரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் கேட்டுள்ளார்.
தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப் பெறும் நோக்கில், ரன்பிம காணி உறுதிகளை வழங்கும் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் அரச தலைவர் ஒருவர் பேசக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜனாதிபதி, இவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.