கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்று முழுதாக ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில்,தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” எனத் தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னரான அபிவிருத்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து அவர் அவ்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,இவ் அபிவிருத்திகள் ஒரு பதற்ற நிலையை அதிகரித்துள்ளன.சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்பட வேண்டியது இங்கு முக்கியம்.மோதல்களின் பின்னரான தேர்தல்களையடுத்து இலங்கை அரசியல் மற்றும் சமூக விடயங்களில் இணக்கப்பாட்டினை எட்டும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆட்சேபனை தெரிவிக்கும் காலம் முடியும் வரை பொறுத்திருந்தீர்களாக்கும்?