தமிழ்ப்பேசும் மக்களின் அவலங்களோடு குறைந்த பட்சத்தொடர்புமற்ற பிழைப்புவாதக் கூட்டம் ஒன்று தமிழ்ப் பேசும் மக்களின் தலைமையைக் கையகப்படுத்தி அவற்றை உலகின் பயங்கர உளவாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக வெற்றுச் சுலோகங்களையும், அடையாளங்களையும் பயன்படுத்தும் இந்தக் கும்பல்கள் புலம்பெயர் நாடுகளில் தம்மை தமிழ் மக்களிலன் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்கின்றன. முள்ளிவாய்காலில் கேட்ட மக்களின் அவலக்குரல்கள் இன்னும் எதிரொலித்துக்கொண்டிக்கிறது. உளவாளிகளிடம் மக்களின் போராட்டத்தை ஒப்படைக்கும் இவர்களுக்கு உலகம் முழுவதும் அரச பயங்கரவாதிகளுடனும் இலங்கையில் ராஜபக்ச கும்பலுடனும் தொடர்புகள் உண்டு என்பதை இன்று அனுமானங்களாக இல்லாமல் ஆதாரத்துடன் காண்கிறோம்.
புலம்பெயர் நாடுகளில் ஜனனி ஜனநாயகத்தைத் தெரியாதவர்கள் இல்லை. ஐரோப்பியப் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பிரித்தானியாவிலிருந்து ஈழத்திற்காகப் போராடுவதாகப் போர்க்கொடி உயர்த்திக்காட்டியவர். சுயநிர்ணைய உரிமை என்பதன் உள்ளர்த்தம், தேசியம் என்பதன் பொருள் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ளத் தவறிய ஜனனிக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்குப் பொறுக்குவதற்கு தமிழர்களின் அவலம் உதவியது.
ஜனனி ஜனநாயகம் உருவாக்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான் இனப்படுகொலைக்கான தமிழர்கள்(TAG – Tamils Against Genocide). பிரித்தானியாவில் தமிழர்களிடமிருந்து வாக்குப் பொறுக்கிக்கொள்ளும் கட்சிகள் மத்தியில் ஜனனியின் டாக் பிரபலமானது. இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் இந்த அமைப்பு மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள எந்த அமைப்புக்களுமே ராஜபக்ச பலமடைவதைத் தடுக்கவில்லை.
இதற்குக் காரணம் இவர்களில் பலரிடம் பிழைப்பதிலிருந்த ஆர்வம் அளவிற்கு மக்கள் மீது நம்பிக்கையிருக்கவில்லை. அதனால் அவர்களிடம் உறுதியாக மக்கள் சார்ந்து புடம்போடப்பட்ட அரசியல் திட்டம் இருக்கவில்லை. அதனால் தமிழர் அரசியல் அமைப்புக்கள் அனைத்தும் உளவாளிகளதும், புலனாய்வு அமைப்புக்களதும் கரங்களில் சிக்கிச் சிதைவடைந்து போனது.
மக்கள் பலத்தில் தங்கியிருந்து ஏகபோக அரசுகளுக்கு எதிராகவும், பல்தேசியக் கொள்ளைக்கு எதிராகவும், மக்களை ஏமாற்றும் ஐ.நா போன்ற அமைப்புக்களுக்கு எதிராகவும், பேரினவாத இலங்கை அரசிற்கும் அதன் அமைப்பிற்கும் எதிராகவும் போராடவேண்டிய அமைப்புக்கள் அவற்றின் அடிமைகளாகவும் ஐந்தாம் படையாகவும் மாறிவிட்டன.
ஜனனி ஜனநாயகம் உருவாக்கிய இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் சட்டத்துறை மற்றும் வழக்கு மேலாளராக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பவர் ஹென்றிதா பிரிஸ்கோய் என்பவர். இவர் பிரித்தானிய இராணுவ அதிகாரியாக வேலை பார்த்தவர். அதுவும் பிரித்தானிய இராணுவத்தின் உளவுப்பிரிவில் வேலைசெய்தவர். அதற்கு முன்பதாக சுனாமிக் காலத்தில் இலங்கையில் தொண்டராக வேலைசெய்தவர்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முந்தோன்றி வாளோடு வேலி பாய்ந்த மூத்த குடிகளான தமிழ் மக்களின் மத்தியில் ஒரு படித்தவரைப் பிடிக்கமுடியாமல் இலங்கையையும் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைப் போராட்டத்தையும் சிதைத்த உளவாளியையா வேலைக்குச் சேர்க்க வேண்டும்.
தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் எனபது நயவஞ்சகர்களதும், பிழைப்புவாதிகளதும், வியாபாரிகளதும் வேசக்காரர்களதும் கைகளில் சிக்குண்டுள்ளது. இதற்கு ஜனனி ஜனநாயகம் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. மிக நீண்டகாலமாக பிரித்தானியத் தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொன்ற அமைப்புக்களுடன் நெருங்கிய அரசியல் உறவுகளைப் பேணிவந்த கிரகாம் வில்லியம்சன் என்பவர் நிறவாத நாஸிக் கட்சியின் உறுப்பினர் என்பது அண்மையில் அம்பலமானது தெரிந்ததே.
ஆதாரம்:
https://www.linkedin.com/pub/henrietta-briscoe/80/845/57
பிரித்தானியாவில் தமிழர்களிடமிருந்து வாக்குப் பொறுக்கிக்கொள்ளும் கட்சிகள் மத்தியில் ஜனனியின் டாக் பிரபலமானது. இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் இந்த அமைப்பு மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள எந்த அமைப்புக்களுமே ராஜபக்ச பலமடைவதைத் தடுக்கவில்லை.
தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் எனபது நயவஞ்சகர்களதும், பிழைப்புவாதிகளதும், வியாபாரிகளதும் வேசக்காரர்களதும் கைகளில் சிக்குண்டுள்ளது.
ஜனனிக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்குப் பொறுக்குவதற்கு தமிழர்களின் அவலம் உதவியது.
ஜனனியின் செயல் தவறாக இருக்கலாம் நீர் யார் ? உம்மை வழிநடத்துபவர் யார் ?
//உம்மை வழிநடத்துபவர் யார் ?//ஆண்டவன், ஆஆண்டவன்….. ஆண்டவன் சொல்ரான் அருணாச்சலம் செய்றான்..
விடுதலைப்போராட்டம் என்ற பேரில் அதனை அழிக்க முற்படுபவர்களை இனியொரு அம்பலப்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியது, வேறு யாரும் செய்யத் துண்யாத செயலி நீங்கள் செய்வது வரவேற்கத்தக்கது.
தானும் செய்யான் தள்ளியும் கிடவான்?
ஓ! எங்கட பிரச்சனை தள்ளிகிடக்காதவனை பற்றியும் செய்யத் துடிக்கிறவனை பற்றியுமோ?
//கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முந்தோன்றி வாளோடு வேலி பாய்ந்த மூத்த குடிகளான தமிழ் மக்களின் மத்தியில் ஒரு படித்தவரைப் பிடிக்கமுடியாமல் இலங்கையையும் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைப் போராட்டத்தையும் சிதைத்த உளவாளியையா வேலைக்குச் சேர்க்க வேண்டும்.//
இலங்கையையும் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைப் போராட்டத்தையும் சிதைத்த உளவாளியையா வேலைக்குச் சேர்த்து ஜனனி வெளிப்படுத்தியுள்ளார்.
மூத்த குடிகளான தமிழ் மக்களின் மத்தியில் ஒரு படித்தவரைப் பிடிக்கச் சொல்வதன்மூலம் (தகுதியானவரை அல்ல) இனியொரு தனது இனவாதத்தை வெளிப்படுத்தியுள்ளது.
வாளோடுவேலிபாய்ந்த்தாகஇனியொருசெய்திஎழுதிய
போதுசிரிப்பு
பொத்துக்கொண்டுவரவில்லை.. அதையே
புரிந்துகொள்ளாதகல்தோன்றி
மண்தோன்றாக்காலத்துஅறிவோடு
அலையும்வோட்டரைநினைக்கும்போது
அழுகைபொத்துக்கொண்டுவருகிறது!
இனியொரு சொல்ல முயற்சிப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தமிழனை வேலைக்கு எடுக்காமல் உளவாளியை எடுத்திருக்கிறது என்பது தான் இனியொருவின் ஆதங்கம். ஒருவனை அவனது இனத்திலிருந்து ஆராய்வது இனவாதமல்லாமல் வேறு என்னவாம்? எனது அறிவு மண்தோன்றாக் காலத்தினதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் நிகழ்காலத்திற்கு வாருங்கள்.
நேரடியாகப் பதில் சொல்லுங்கள்: இந்தக் கட்டுரையின் குறிப்பிட்ட பந்தி சரியானதா?
என்ன செய்வது புத்தகத்தை சோதனைக்காக படித்த ஒரு மந்தைக் கூட்டம் இங்கே வந்து மந்தை வேலையைக் காட்டுது. அதுகளுக்கு இனம் என்ன மொழி என்ன.?
பாராளுமன்றம் போனால் கதிரை சுகம் ,போலி கௌரவம் எல்லாம் கிடைக்கும் என்ற பொறுக்கித்தனம் தான்.வெள்ளைக்காரனுக்கு பல்லிளிக்கும் அடிமைத்தனம் வேறு.
சாரு மட்டும்தான் பிரித்துப் பிரித்து புரின்சிண்டு படிச்சிருக்காப்பல, அந்த பஸ்ட் கிளாஸ் கிடைக்காத வேதனையோ ?
The unit would be staffed by 12 members…
Including 2 forensic experts…
A gender specialist…
A legal analyst…
& Investigators…
And as I commented before…
Beidas, a high ranking official… Previously worked with the UN Mission in South Sudan being expelled from the country in Nov 2012 after being accused of writing false report about the conduct of the South Sudanese Militry…
But NaviPilly denied the accusations against her staff member… And accused the South Sudanese govt…
Anyhow… The same tough lady in this team now…
We’ll wait & see…
Specially USA’s buddy BJP Modi’s roll in this…
For Diaspora Tamil medias & Wimal Weeravensa team… Kaddilla Mallai… Hmm…