அரசாங்கம் மக்களை நெருங்குவதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும் என இந்தோனேசியாவின் பாலித் தீவூகளில் நடைபெற்று வரும் ஜனநாயக ஒன்றிய அமர்வுகளில் கலந்து கொண்ட போது வன்னிப் படுகொலைகளின் சூத்திரதாரியும் சர்வாதிகாரியுமான இலங்கை ஜனதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மக்களின் அன்றாட வாழ்வியலின் அங்கமாக அமைய வேண்டும் எனவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறைமை கிராமிய மட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவ்வமர்வின் போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பேரினவாத குடும்ப ஆட்சியை நிகழ்த்தும் ராஜபக்சவின் இக் கருத்து கேலிக்குரியது.