பாஹ்ரயினில் சர்வாதிகாரி அல் கலீபா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஐரோப்பா மற்றும் அமரிக்க ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் பாஹ்ரயின் அரச படைகள் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரச படைகளுக்கு சௌதி அரேபியா ஊடாக அமரிக்கா அழிவு ஆயுதங்களை வினியோகம் செய்கிறது.
ஆளும் அரச குடும்பத்தை ஆட்சியிலிருந்து விலகுமாறும் நாட்டில் ஜனநாயகத்தை கட்டமைக்குமாறும் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகின்றனர். அமரிக்க ஆதரவு சர்வாதிகார ஆட்சி மக்கள் மீது நடத்திவரும் தாக்குதல்களால் கடந்தவராம் மட்டும் பத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து ஜனநாயக ஆட்சி கோரிப் போராடிவரும் மக்களின் இழப்புக் குறித்து சர்வாதிகார ஆதரவு மேற்கு ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை.
There a Sunni minority is ruing over a Shia majority. It is Home to the Fifth Fleet of the United States Navy. Anybody can imagine the inter play of interests.