கர்நாடக மாநிலத்தின் ஜக்கி வாசுதேவ் தமிழகத்தில் குடியேறி ஆஸ்ரமம் ஒன்றை கோவை அருகில் அமைத்துக் கொண்டார்.துவக்கத்தில் மரம் நடுதல், இயற்கை வேளாண்மை செய்தல், கிராமிய விளையாட்டுகளை மீட்டெடுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜக்கி வாசுதேவ் திடீரென சிவ வழிபாட்டை பார்ப்பனீயத்துடன் இணைத்து அதை ஈஷாவின் அடையாளம் ஆக்கியதோடு கார்ப்பரேட் சாமியராகவும் வலம் வந்தார்.
இப்போது தமிழகத்தில் உள்ள இந்துக் கோவில்களை அரசிடம் இருந்து எடுத்து தனியார்களிடம் அதாவது பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இயக்கத்தை துவங்கியுள்ளார். கோவில்களில் இருந்து வரும் கோடிக்கணக்கான வருவாய் பார்ப்பனர்களின் வீடுகளுக்குச் சென்ற நிலையில் கோவில்களுக்கு காணிக்கை கொடுக்கும் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இந்துக் கோவில்களில் வழிபாடு செய்யும் உரிமையே மறுக்கப்பட்டது.
அதனால்தான் இந்து சமய அறநிலையத்துறை உருவானது. ஆனால் அந்த விஷயத்தை மறைத்து ஏதோ அரசு இந்துக் கோவில்களை கபளீகரம் செய்வது போல ஜக்கி பேசி வந்த நிலையில் தெய்வத் தமிழ் வழிபாட்டு மன்ற தலைவர் பெ.மணியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து ஜக்கியின் ஈஷா மையத்தை அரசுடையமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.. கர்நாடகத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியிருப்பவர் ஜக்கி வாசுதேவ். அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை நடைபெறுவதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். கோவில்களில் உள்ள குறைகளை கண்டறிந்து களைய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.