சௌதி அரேபியத் தலைநகரான ரியாத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசிற்கு எதிரான சுலோகங்களை முன்வைத்தனர். மத்திய கிழக்கில் அமரிக்க அரசின் அடியாள் அரசாகச் செயற்படும் சௌதி அரேபியாவில் அமரிக்க எதிப்பாளர்கள் உட்பட குறைந்த பட்ச ஜனநாயகத்தைக் கோரிப் போராடும் பலரும் சிறைவைக்கப்பட்டு பின்னதாக மரணதண்டனை போன்ற மனித குல விரோத தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இஸ்லாமிய சட்டங்களின் பெயரால் அமரிக்க ஜனநாயாகத்தை வழிநடத்தும் சௌதி அரேபிய அல் சௌத் இன் ஆட்சிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கைதான பெண்களையும் குழந்தைகளையும் விடுதலை செய்யுமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பினர். ஜனவரி ஏழாம் திகதி கசீம் மாநிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திற்கு மேற்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் சௌது அரேபிய சர்வாதிகார ஆட்சி சிறைப்பிடித்துள்ளது.
அதே வேளை இலங்கைத் தமிழ் முஸ்லீம் பெண்ணான ரிசானா முஸ்லீம்களின் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலேயே கொலைசெய்யப்ப்பட்டதால் அதனை எதிர்ப்பது தவறாகும் என இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் அடிப்படைவாதிகள் சிலர் கூறிவருகின்றனர். அமரிக்க ஆதரவு சௌதி அரேபியாவின் மக்கள் தமது அரசின் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவருகின்றனர்.
inioru.com ! is what we need and world needs!! congrats guys!!! we need truth like inioru.com brings with non commercialize world!