தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்தால் இலங்கையிலிருந்து துரத்தப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள் உலகம் முழுவதும் வசித்துவருகின்றனர். இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்கன்டினேவியன் நாடுகள், ஐரோப்பா, கனடா, தென்னாபிரிக்கா, அமரிக்கா போன்ற நாடுகளில் முப்பதுவருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இலங்கை அரச பாசிசத்திற்கு ஆதரவானவர்கள் மட்டுமே அடிப்படை உரிமைகளை உறுதிசெய்து இலங்கை திரும்ப முடியும் என்ற நிலை காணப்படும் போது துரத்தப்பட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல்செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
1982 ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு என்ற தலையங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ராஜபக்ச பாசிஸ்டுக்களின் கண்துடைப்பு நடவடிக்கை இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
வடமாகாணத்திலிருந்து மட்டும் பத்துலட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதுகாப்பிற்காக வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் எனக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அகற்றப்பட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் இலங்கை அரசு எஞ்சிய நிலத்தையும் பறிமுதல் செய்து பல்தேசிய நிறுவனங்களுக்கும் சிங்கள பௌத்த குடியேறிகளுக்கும் வழங்கி வருகிறது.
There is no Facism here. The pacification process is not yet over in the North and East. They are taking their own time. Normalcy is returning. The government is functioning. It will take time for people to return and reclaim their property.