வேறு சாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்த மகளையும், அவரது 4 மாத ஆண் குழந்தையையும் ஆத் திரமடைந்த விவசாயி கொலை செய்தார். இந்த கொடூரக் கொலை கிரா மத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட் டத்தில் தமசந்திரா கிராமம் உள்ளது. இந் தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ் ணய்யா. இவரது மகள் தீபிகா வேறு சாதி யைச் சேர்ந்த வெங்கடேஷை திருமணம் செய்தார். மகள் திருமணத்தை எதிர்த்த ராமகிருஷ்ணய்யா மகள் மற்றும் அவரது 4 மாதக் குழந்தையை கொலை செய்தார்.
இதுதொடர்பாக தீபிகாவின் கணவர் வெங்கடேஷ் காவல்நிலையத்தில் மாம னார் ராமகிருஷ்ணய்யா, மாமியார் கவு ரம்மா மற்றும் 4 பேர் மீது புகார் செய்துள் ளார். இந்த 6 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
பிப்ரவரி 1ம்தேதியன்று ராமகிருஷ் ணய்யா மகள் தீபிகாவுடன் தொலைபேசி யில் பேசினார். அப்போது தாயார் மருத் துவமனையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய தீபிகா தமசந்திரா கிராமத்திற்கு பஸ்சில் வந்தார். அதன்பின்னர் வெங்கடேஷ் தீபிகாவை பல வாரங்கள் காண முடியவில்லை. பிப்ரவரி 27ம்தேதியன்று மனைவி மற்றும் தனது குழந்தை குறித்து தமசந்திரா கிராமம் வந்த வெங்கடேஷ் வினவினார். அப்போது தனது மனைவியையும், ஆண் குழந்தையை யும் உறவினர்கள் கொன்றதாக தகவல் கிடைத்தது என வெங்கடேஷ் காவல்நிலை யத்தில் தெரிவித்தார்.