ஜெயலலிதா 11 வருடங்களாக சமூகமளிக்காமல் ஒத்திப்போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் இரண்டாவது நாளான நேற்று நீதிபதி மல்லிகார்ஜுனையா கேள்விகள் கேட்டார். பல நிறுவனங்களில் பங்குதாரரான நீங்கள் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்றது எவ்வாறு எனக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா தான் பங்குதாரரகப் பெயரளவில் மட்டுமே இருந்ததாகவும் பங்குகள் இருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
`உங்களது வீட்டிலிருந்து பெருமளவில் நகைகள் மற்றும் பல பொருட்களை போலீசார் கைப்பற்றியிருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’, என ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜுனையா கேட்டபோது, `பல நகைகள், நான் முதல்வராவதற்கு முன்பே வாங்கியது, சில நகைகளை போலீசாரே எடுத்து வந்து ஜோடித்திருக்கிறார்கள்’, என்று ஜெயலலிதா பதிலளித்ததாக ஆச்சார்யா தெரிவித்தார்.
இரண்டாவது நாளில், 188 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களில் 567 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்துள்ளார். அவரிடம் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட வேண்டியிருப்பதால், அடுத்த விசாரணை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெயலலிதா ஆஜராக வேண்டும்.
ஒரு ரூபா சம்பளம் வாங்கி முதல்அமைச்சாராக இருந்து தமிழகமக்களுக்கு
தொண்டு செய்து கொண்டு எப்படி பலஸ்தாபனங்களுங்களுக்கு உங்களால் பங்கு தாரராகவும் இருக்க முடிந்தது என்ற நீதிபதியின் கேள்விக்கு அம்மையார் கொடுத்து விளக்கம் நான் பங்குதாரர் தான். ஆனால் எந்த முதலீடையும் நான் செலுத்தவில்லை.
ஆகவே இதை லஞ்சமாக பெற்றார் என்பதாகவே கருதவேண்டியது.
இந்த அமையாருக்கு குலுக்கு நடிகைக்கு தமிழகத்து தலைவிக்கு என்ன தண்டணை என்பதை இனி இருந்து தான் கவனிப்போமே!.