2013 இல் கணணி வைரஸ் தாக்குதல்கள் ஊடாக சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என கஸ்பேர்ஸ்கி வைரஸ் எதிர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக உலகம் முழுவதும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாத்தின் ஒரு பகுதியாக இந்த வைரஸ் தாக்குதல்களும் அமைந்துள்ளன. ஈரான் அரசு பிளம் என்ற வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த வைரஸ் கணனி வலையமைப்பின் உள்கட்டமைப்புக்களைக் கூட உடைக்கும் தன்மைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கணணி வலைப்பின்னலின் உள்கடமைப்பில் ஒரு பகுதியில் இது ஆரம்பித்தால் அது முழுக் கணணிகளையும் பாதிக்கும் தன்மைவாய்ந்தது. இது வரை இந்த அளவிற்கு சக்திவாய்ந்த வைரஸ் தாக்குதல் இடம்பெறவில்லை என கஸ்பேர்ஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.