தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாராம் அடித்தே கொல்லப்பட்டு ஓராண்டு ஆனதன் நினைவு நாள் நேற்று தூத்துக்குடியில் நினைவுகூறப்பட்டது. ஏராளமான மக்கள் திரண்டு ஜெயராஜ் பென்னிக்ஸ் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று சேலத்தில் வணிகர் ஒருவர் போலீசாரார் லத்தியால் அடித்தே நடுரோட்டில் வைத்து கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள பாப்பநாயகன் பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது முருகேசன் என்ற வணிகர் அவ்வழியே நண்பர்களோடு வர அவரை போலீசார் வழி மறித்ததாக கூறப்படுகிறது. போதையில் இருந்த அவர் போலீசாருடன் தகறாரில் ஈடுபட்டதால் போலீசார் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள்.
முருகேசன் போலீஸ் தாக்குதலில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக கூறப்படுகிறது. போலீசார் தாக்கும் விடியோ இணையத்தில் பரவி வைரலான நிலையில் தாக்குதலுக்கு காரணமான சிறப்பு எஸ்.ஐ. பெரியசாமி கைது செய்யப்பட்டார் அவர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில் இறந்த முருகேசனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வைத்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.