31.10.2008.
செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் ,இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன.
இலங்கைகான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியுள்ள இந்த சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகின்றன.
இலங்கையிலுள்ள தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களின் ஒலிபரப்பு உரிமங்களை ரத்து செய்ய இலங்கை அரசு எடுத்து வரும் நடவடடிக்கைகளையும் இந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.