Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

செம்மொழி மாநாட்டிற்கு ஆதரவாகப் புலிகளின் அறிக்கை – கருணாநிதியின் புதிய நாடகம் : திரு

இனியொரு... by இனியொரு...
06/21/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
37
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே பல தடவை தனது நேர்காணல்களில் தமிழ் நாட்டைத் தமக்குச் சாதகமாக எப்படி மாற்றிக்கொண்டோம் என குறிப்பிடுகிறார். எந்த ஜனநாயக வரம்புகளுக்கும் உட்படாத ராஜபக்சே குடும்பத்தோடு கருணாநிதியின் குடும்பத்தின் அரசியல் உறவு வெளிப்படையானது. கனிமொழி ஈறான தி.மு.க உறுப்பினர்கள் இலங்கை சென்ற வேளையில் அதன் ஆழம் ஒளிவு மறைவின்றி வெளிப்பட்டது.

கருணாநிதியும் சிதம்பரமும் இலங்கை அரசும் இணைந்து நடத்திய நாடகம் தான் கருணாநிதி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தது என்று கோதாபய ராஜபக்சே எத்தனை ஊடகங்களுக்குச் சொல்லியிருப்பார்? கருணாநிதி குடும்பத்திடமிருந்து எந்த மறுப்பும் இதுவரை வந்ததில்லை. நாடகத்தின் கதாசியர் மட்டுமல்ல அதன் கதாநாயகனும் தானே என ஒத்துக்கொள்கிறார் கருணாநிதி.

கர்பிணிப் பெண்கள், பச்சிழம் பாலகர்கள், முதியவர்கள் என்று ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்கள் வன்னி மண்ணில் அனாதைகளாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அதே நாளில் டெல்லியில் தனது பேரப்பிள்ளைகளின் பதவிக்காக பேரம் பேசிக்கொண்ட்ருந்தார் ஒரு முதியவர். அவர் தான் முத்துவேல் கருணாநிதி என்பவர். கருணாநிதியும் அவரின் பரிவாரங்களும், ஈழத் தமிழர்கள் கொசுக்கள் போலக் கொல்லப்பட்டுக்கொண்ட்ருந்த போது அதனைக் கண்டித்து அமைதி வழியில் போராடிய தமிழ் நாட்டுத் தமிழர்களைச் தெருத் தெருவாக வேட்டையாடிச் சிறையில் அடைத்தவர்.

முத்துக்குமார் தமிழ் மக்களுக்காகச் செத்துப் போனபோது அமைதி வழியில் இலங்கை அரசைக் கண்டித்த ஆயிரமாயிரம் தமிழர்களை மிரட்டிப் பணியவைக்க முற்பட்டவர்.

இவ்வாறு நாடகமாடும் அரசியல் துரோகத்தின் கதாசிரியன் கருணாநிதி தனது இரத்ததின் இரத்தங்களுக்காக கடைசியாக ஆடிய நாடகம் தான் விழுப்புரம் ரயில் தண்டவாளத் தகர்ப்பு. அனைத்தையும் கேள்வியெழுப்பும் புதிய சந்ததி ஒன்று உருவாகியிருப்பது கலைஞர் கருணாநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த சந்ததி விழிப்பாக இருக்கிறது. விழுப்புரம் ரயில் நாடகம் பிசுபிசுத்துப் போன போதே அதை அவரும் அவரின் பின்னால் இருக்கும் கூட்டமும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தவறிவிட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் ரஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வேளையில் திணிக்கப்பட்ட அடக்கு முறைகளைக் கடந்து வந்திருக்கும் உரம் மிக்க இந்தச் சந்ததி யாரையும் நம்பப் போவதில்லை.

பார்வதியம்மாள் தனக்குக் கடிதம் எழுதியதாக இன்னொரு நாடகத்தை அரங்கேற்றிய போது யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அவ்வாறான கடிதம் எதுவும் பார்வதியம்மாளால் முத்துவேல் கருணாநிதிக்கு எழுதப்படவில்லை என்பதே உண்மை எனத் தெரிய வருகிறது.

புலிகளின் பெயரில் கருணாநிதிக்கு பாராட்டு- உளவு நிறுவனங்களின் விளையாட்டு.

தமிழுக்காக உரிமை கோரிய வழக்குரைஞர்களை எல்லாம் சிறைக்குள் பூட்டிவைத்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்துவதற்காக கோவைக்கு செல்லும் கருணாநிதியின் நவீன நாடகம் தான் புலிகள் இன்று அவருக்கு எழுதிய கடிதம்.

செம்மொழி மாநாட்டைப் புலிகள் பாராட்டியதாக அவருக்கு ஒரு மடல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த முறை அறிக்கை ரூபன் என்பவர் பெயரில் வந்திருக்கிறது. தமிழ் செம்மொழி மாநாட்டை ஆதரிப்பதற்காக எழுதப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தமிழக அரசியலையும் மொழியையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து தமிழனத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் விரோதியான முத்துவேல் கருணாநிதி இன்னொரு அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார். எங்கோ கேட்ட சினிமாக் கதை போல் இல்லை?

இன்று புலிகளின் பிரசன்னம் எங்கும் இல்லை. ஆங்காங்கே சிதறிக்கிடப்பவர்கள், தம்மைப் பாதுக்காத்துக்கொள்ளவே வசதியற்றுத் தவிக்கிறார்கள். இலங்கையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், படுகொலைகளும் என்று வடகிழக்கில் திறந்தவெளி வதை முகாமை நடத்தி வருகிறது பேரினவாத ராஜகபக்சே குடும்பம்.

வசதியாக வாழ்ந்த வன்னிக் குடும்பங்கள் உணவின்றி செத்துக்கொண்டிருப்பது எமது இதயத்தை முள்ளால் துளைக்கிறது. உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழினத்தினதும் தமிழினதும் வேர்கள் அறுக்கப்பட்டு வெட்டிச் சாய்க்கப்படுகிறது. அந்த நசிவுகளில் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு செம்மொழி மாநாடு நடத்துகிறாரம் தமிழுக்காக. அதற்காக புலிகளின் பேரில் தானே அறிக்கை தயாரித்து, அதற்குப் பதிலையும் தானே தயாரித்து ஊடகங்களை ஏமாற்றியுள்ளனர் கருணாநிதியும் அவர் சார்ந்த கும்பலும்.

தவிறவும் தமிழர்கள் எல்லாம் உலகம் முழுக்க இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டு விட்ட இந்தச் சூழலில் தமிழ் மொழியைக் காப்பாற்றுவது போல நாடகமாடுகிறார் இந்த சந்தர்ப்பாவாதி. ஆனால் தமிழக நீதிமன்றங்களிலேயே தமிழுக்கு இடமில்லை என்பதால் வழக்கறிஞர்கள் கைதாகி சிறை சென்று அங்கேயும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சிறைக்குச் சென்றிருக்கும் வழக்கறிஞர்கள்தான் அன்று பொர் நிறுத்தம் கேட்டுப் போராடினார்கள். அப்படிப் போராடிய வழக்கறிஞர்களை நீதிமன்றத்திற்குள் நுழைந்து அடித்து உதைத்த கருணாநிதி இன்று தமிழுக்காக மாநாடு நடத்துவதாகச் சொல்கிறார். ஆனால் அன்று ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்களோ இன்று தமிழுக்கு அங்கீகாரம் கேட்டுப் போராடி சிறை செல்கிறார்கள்.

உண்மையான ஈழத் தமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

உண்மையான ஈழத் தமிழர்களும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் இந்திய, தமிழக சந்தர்ப்பவாத தலைமைகளுக்கு எதிராக போராடும் சக்திகளையும் ஏனைய போராடும் சக்திகளையும்தான் ஆதரிக்க வேண்டுமே தவிற திட்டமிட்டு நாடகம் ஆடும் கருணாநிதியை அல்ல! மக்களைக் காட்டுக் கொடுத்து போருக்கு துணை நின்ற கருணாநிதியை ஆதரிப்பது ஈழ மக்களுக்குச் செய்யும் வரலாற்றுத் தூரோகம். முத்துக்குமார் தொடங்கி 19 தமிழகத் தோழர்கள் உயிர்த்தியாகம் செய்தும் இன்று வரை அந்தத் தோழர்களின் நினைவைப் போற்றும் விதமாக ஒரு சிலை கூட வைக்க கருணாநிதி அனுமதித்த தில்லை.

நிலமை இப்படி இருக்கும் போது செம்மொழி மாநாட்டை ஆதரித்து அறிக்கை விடுத்திருப்பதோடு செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு ஏதோ கருணாநிதி தமிழினத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழக, இந்திய உளவு நிறுவனங்களின் இன்னொரு விளையாட்டு இது போல இன்னும் பல அறிக்கைகள் வெளிவரும். நாளை கனிமொழி, மு.க. அழகிரி ஏன். காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவைப் பாராட்டிக் கூட புலிகளின் பெயரில் அறிக்கை வரலாம். ஈழ மக்களே, உண்மையான தமிழக ஆதரவாளர்களே இந்த துரோகிகளின் உண்மை முகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தொடர் தண்டாவாளத் தகர்ப்புகள் மனித உரிமை மீறல்.

Comments 37

  1. யாழ் says:
    16 years ago

    இநத எலும்புப் பொறுக்கி அரசில் வியாதிகளின் திருகுதாளங்களை இனி எந்த மானமுள்ள தமிழனும் நம்பமாட்டான். பதவிக்காக எதையும் எதையும் விட்டுக் கொடுக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பவாத வியாதியை தமிழகம் தலைவனாகக் கொண்டுள்ளதற்கு அவமானப்பட வேண்டும்.  இப்படிப்பட்ட கேவலமான துகில் உரியபட்ட அம்மண அரசில் வாதிகளை தமிழா தலைவன் என்று சொல்வதற்கு தமிழினம் வேதனைப்படவேண்டும்.  யாழ்

    • அப்துலாஹ் says:
      16 years ago

      எல்லோர்ருக்கும்  சையனட்டு குப்பியை கழுத்தில் தொங்க விட்டு விட்டு தான் மட்டும் வெள்ளை  கொடியை தலைக்கு மேல் பிடித்த துரோகி / சுயநலவாதின் கேவலத்தை விடவா..? இதக்கு தமிழ் இனம்  என்ன செய்ய வேண்டும்..?

      • rajan says:
        16 years ago

        திரு அப்துலாஹ்
        எல்லா

        விதமான
        பிரச்சனைகளுக்கும்

        உங்களிடம் இருப்பது
        ஒரே பதில் தானா?
        நான் நினைக்கிறன்
        “நீங்கள் ஒரு முஸ்லிம்
        சகோதரனின் பெயரில் மறந்து இருக்கும்
        ஓர் கெட்ட,மிகவும்
        கொடூரமான எண்ணம் கொண்ட பிறவி” என்று
        இல்லை என்றால் மன்னிக்கவும்

    • அசோக் says:
      16 years ago

      வெட்கி தலை குனிகிறேன்.

    • வெங்கட் says:
      16 years ago

      Posted on 06/22/2010 at 5:28 amவணக்கம், கருணாநிதி நடத்திய நாடகம் இது என்றால் , நீங்கள் எடுத்திருப்பது பிரமாண்ட திரைப்படம்ஈழப்பிரச்சனையில் தமிழ்நாட்டில் தீக்குளித்த நண்பர்களை தவிர மற்ற அனைத்து அரசியல், அரசியல் சாராத அமைப்புகள் அனைத்துமே நடத்தியது நாடகமே குறிப்பாக நெடுமாறன்,வைகோ ,சீமான்,ஜெயலலிதா,திருமாவளவன்,கருணாநிதி, காங்கிரசு கட்சி தலைவர்கள் மற்றும் வக்கீல்கள். இதற்கு கரணம் வைகோ,நெடுமாறன் போன்றோர் வைத்திருந்த கூட்டு அதே போல் கருணாநிதி வைத்திருந்த கூட்டு பிறகு சீமான் தொடங்கிய அரசியல் கட்சி. போரிலே விடுதலைபுலிகளின் நிலை சரிந்தவுடன் ஈழத்தமிழர்களுக்காக போராடிய அனைவரும் கருணாநிதி தவிர மற்ற அமைப்புகள் பிரபாகரன் ஒன்று இறந்து விட்டார் அல்லது தப்பிவிட்டார் அது போதும் என்று நினைத்து ஓய்ந்து விட்டனர். இதிலிருந்து அவர்கள் உண்மையாக தமிழ் மக்களுக்காக போராட வில்லை பிரபாகரனுக்காக மட்டுமே போராடினார்கள் என்பதையும் நான் பதிவு செய்ய கடமை படுகிறேன். ஒன்றையும் நினைவில் கொள்ளவேண்டும் ஈழப்போர் கடுமையாக நடந்த போது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி நடந்திருந்தால் இன் நேரம் போராடிய அனைவரும் பொடாவில் இருந்திருப்பார்கள் என்னை பொறுத்தவரையில் கருணாநிதி தமிழின் காப்பாலரே.தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று தற்போது போராட்டம் நடத்துபவர்கள் இத்தனை காலமாக என்ன செய்தார்கள் ,அவர்களின் எண்ணம தற்போது தி.மூ.க.வின் பலம் அதிகரித்து வருவதனால் அதனை மறைக்க ஜெயலலிதா, வைகோ மற்றும் பலரின் தூண்டுதலின் பேரில் நடக்கும் போராட்டமே தவிர உண்மை அல்ல,கருணாநிதிக்கு பார்வதியம்மளிடமும் விடுதலை இயக்கத்திடம் இருந்து வந்த கடிதம் போய் எனில் மேலே நிங்கள் எழுதியிருக்கும் கட்டுரை பிரமாண்ட திரைப்படமே……..நன்றி ………………………………………………………………………………. 

  2. அக்னி says:
    16 years ago

    கருணாநிதி என்பவர் ஒரு அரசியல் வாதி. அவர் நாடகம் நடத்தி வருவதும் வாடிக்கைதான். இதில் மாறுப்பட்ட கருக்துக்கு இடமில்லை.
    ஆனால், ஒரு ஆச்சிரியம் என்னனெனில், நீங்கள் கோதாபய ராஜபக்சேவையும், கருணாநிதியையும் தெரிந்து வைத்துள்ளது போல், இயக்கம் பற்றி தெரியவில்லையே என தெரிகிறது. “கோதாபய ராஜபக்சே நேர்காணல்களில் தமிழ் நாட்டைத் தமக்குச் சாதகமாக எப்படி மாற்றிக்கொண்டோம்” என்பதை நம்பும் நீஙகள், ஏன் இயக்கத்தின் அறிவிப்பை இப்படி கொச்சைப்படுத்துகின்றீர்கள். இயக்கம் உங்களிடம் நேரிடையாக வந்து அறிக்கை தரவேண்டும் என நினைக்கின்றீர்களா. இங்கு தமிழகத்தில் உள்ள பல தமிழியக்க அரசியல் தலைவர்கள் அப்படித்தான் இருந்து வருகின்றனர். இல்லையெனில், அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றனர். அதுபோலவே, நீங்களும் ஆகி விட வேண்டாம். ஏதோ, இந்திய – தமிழக உளவுத்துறையினரின் பக்கத்தில் உக்கார்ந்து கொண்டு, அவர்களின் நடவடிக்கைகளை தெரிந்தது போல் எழுதுவது, எள்ளி நகையாடிக்கூடியதாய் உள்ளது. தமிழகத்தில் தமிழின் மீது ஏற்பட்டுள்ள எழுச்சியினால், வழக்குரைஞர்கள் உண்ணாநோன்பில் பங்கெடுத்து, வெற்றியை நோக்கி செல்கின்றனர். தமிழ் செம்மொழி மாநாடு ஒரு கருணாநிதிக்காக, உலகில் உள்ள 3.000 மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் வந்து புகழ்ந்து பாராட்ட ஒன்று தி.மு.க மாநாடு அல்ல. தமிழுக்காக பாடுபடும் நம் போன்றவர்கள், தமிழின் வளர்ச்சியை நோக்க வேண்டுமேயொழிய, தனிநபர் பெயர் பெற்றுச் சென்று விடுவார் என நினைப்பது அறிவிலித்தனம் என தோன்றுகிறது. வெளியில் தமிழுக்காக உழைக்கிறேன் பேர்வழி என தப்பட்டம் அடித்துக் கொண்டு, தமிழ் மொழியையே கேலித்கூத்துக்குள்ளாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இராசதந்திர நகர்வுகளை நடைமுறைப்படுத்த நீங்களும் உடன் வரவேண்டும்.

    • Shiva says:
      16 years ago

      “தமிழ் செம்மொழி மாநாடு ஒரு கருணாநிதிக்காக, உலகில் உள்ள 3.000 மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் வந்து புகழ்ந்து பாராட்ட ஒன்று தி.மு.க மாநாடு அல்ல” என்கிறீர்கள்.
      கருணாநிதியை உலகின் தமிழ் அறிஞர்கள் பலர் வந்து புகழ்ந்து பாராட்ட ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு அது என்பது தான் உண்மை நிலை.
      அதன் பின்னணி சென்ற ஆண்டில் பிற்பகுதி முதல் அம்பலப் படுத்தப் பட்டு வந்துள்ளது.
      “தமிழ்ப் பேராசான்கள் எனப்படும் சிலரின் ‘கால் கழுவி வயிறு வளர்க்கும்’ தன்மையும் தகைமையும் புலனானது.

      முதலிலிருந்தே இந்த மாநாடு ஒரு ஆராய்ச்சி மாநாடு போல ஒழுங்கு செய்யப்படவில்லை.
      2011ம் ஆண்டு நடக்கவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன் கொண்டுவர எடுத்த முயற்சி பலிக்காமலே மாநிலத் தேர்தலுக்கு முன் நடந்தேறுமாறு இந்த மாநாடு அவசர அவசரமாகக் கூட்டப் பட்டது.
      முத்துவேல் கருணாநிதி முள்ளிவாய்க்கால் கொடுமைகளால் தடுமாற நேர்ந்த்தது ஒரு விபத்து.

      இம் மாநாடு நிராகரிக்கப்பட வேண்டிய நல்ல காரணங்கல் பல. முள்ளிவாய்க்கால் அவற்றில் முக்கியமானதல்ல.
      இம் மாநாடு தமிழாரய்ச்சியைக் கேலிக்கூத்தாக்குகிறது என்பதே என் கவலை.

      • அக்னி says:
        16 years ago

        உங்களது பெரும்பாலான கருத்துக்களை ஆதரிக்கிறோம். ஆனால், அறிக்கையால் ‘ஒரு அழுத்தம்’ கொடுக்கப்பட்டுள்ளதை மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.  கருணாநிதி இதிலிருந்து தப்ப முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும் என கட்டாயத்தில் உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

      • Shiva says:
        16 years ago

        நன்றி. ‘ஒரு அழுத்தம்’ கொடுக்கப்பட்டுள்ளதென உடன்படுகிறேன். ஆனால் அழுத்தத்தின் விளைவு என்ன?
        எத்தனையோ தடவை நழுவிய பேர்வழியான கருணாநிதியால் நழுவ முடியும் என்பதே என் அச்சம்.
        அதை விட, அடிப்படையான தவற்றைக் கை விட்டு அவரளவுக்குக் குற்றவாளிகளான “கற்றோர் எளிதாக நழுவ வழி செய்கிறோம்.
        தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாகும் வரை இதே ஆட்டம் தான் தொடரும். யார் ஆடினாலும் கதை ஒன்றே.

        • அக்னி says:
          16 years ago

          நீங்கள் சொல்வது உண்மையே. இன்னொருமுறையும் முயற்சிப்போம். தோல்வி நிலையென நினைத்தால்…..

    • JAMES FRIEDRICH says:
      16 years ago

      அக்கினி!!(சூரியத் தேவன்?),அப்போ,”ரா…ஜதந்திரமாக ” உள்ளே விட்டு அடிக்கிறேன் என்று கூறுங்கள்!,நீங்கள்தான் மாவிலாறு அணையை திறந்துவிடச் சொன்னீர்கள்,எல்லோரையும் “நந்திக் கடல் கரைக்கு” வந்து கூடுங்கள் “ஓபாம” கப்பல் அனுபுவார் என்று கூறினீர்கள்,ராஜதந்திரமாக,யுன்.பி.ஐ.(சரத் பொன்சேகா) யை ஆதரிக்க சொன்னீர்கள் என்று இதிலிருந்து தெரிகிறது!,வெங்காய தமிழ் பச்சி,வெங்காய தமிழ் போண்டா,வெங்காய தமிழ் வடை…தேசிய வியாபாரிகளே!.

      • அக்னி says:
        16 years ago

        உண்மையாக நீங்கள் கூறிப்பிடும் பலவற்றை நான் கூறியதே இல்லை. ஏதோ தவறான நபர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் என்னிடம் கூறுகிறீர்கள். 2009 மே 18க்கு பின்னர் எங்களது மனிதம் ஈழத்திற்காக செய்த சில நல்ல காரியங்கள் – 1. வணங்காமண் நிவாரணப் பொருட்களை ஈழ மக்களிடம் கொண்டு சேர்த்தது 2. தமிழினப் படுகொலைகள் – 1956 முதல் 2008 வரை நடைபெற்ற படுகொலைகள் குறித்த ஆவணத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தகமாய் வெளி கொண்டு வந்ததுதோடு, அப்புத்தகத்தை தமிழகத்திலும், உலகின் பிற நாடுகளிலும் கொண்டு சேர்த்தது. (அயர்லாந்து, டாபிலின் நகரில் நடத்த படுகொலை கண்காணிப்பு நீதிமன்றத்தில் இப்புத்தகம் ஒரு ஆவணமாய் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது). 3. பார்வதியம்மாள் தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வர எண்ணி, கடிதம் ஒன்றை எங்களிடம் கொடுக்கப்பட்டு, அதை உரிய நபரிடம் சேர்த்தது. 4. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நம் விவாதத்திற்கு வழிகோளியது. 

        • xxx says:
          16 years ago

          இந்த ஆளுடன் ஏன் சார் மெனக்கெடுகிறீர்கள்?
          அவருடைய முன்னைய இடுகைகளைப் பார்த்தாவது அறிந்து கொள்ளுங்கள்.

          • அக்னி says:
            16 years ago

            யாருக்கு உங்களது அட்வஸ்?

          • xxx says:
            16 years ago

            ஒங்களுக்குத் தான் அக்னி சார். இப்போ தெரியுது அட்வைஸ் பண்ணதூ தப்பூன்னூ.
            பட்டுத் தெளிஞ்சுக்கோங்க! (இதூ அட்வைஸ் இல்லே).

          • அக்னி says:
            16 years ago

            உங்க அன்புக்கு நன்றி.

          • rajan says:
            16 years ago

            உண்மைதான் அக்னி
            நீங்கள் உங்கள் உணர்வுகளுக்காக
            எழுதுகிறீர்கள்
            அவர்கள் தங்கள் உணவுக்காக ………….

            விட்டு தொலையுங்கள்

            ஒன்று மட்டும் உண்மை
            நல்ல திரைகதை அமைக்க கூடியவர்கள்

    • அப்துலாஹ் says:
      16 years ago

      இராசதந்திர நகர்வு ..எங்க போக ?. நம்புங்கள்  நம்ப்ங்கள்  என்று தான் ஒரு தலைமுறையை பலி வாங்கி விட்டீர்களே ..இதுவரை நீங்கள் சொல்லி செய்ததும் / மக்களுக்கு செய்த நன்மைகளையும் குறைத்தது 10 கூறுக (கொலை கொள்ளை , தமிழன் என்ற இனத்துக்குள் அடங்கும் முஸ்லிம் என்ற இனத்தை இன அழிப்பு செய்ய முயன்றது..சிறுவர்  சிறுமிகளை கடத்தி அடிமை போராளிகள் ஆக்கியது …ETC தவிர ). செம்மொழி மகாநாட்டை பற்றி பேச “அவர்களுக்கு” என்ன யோக்கியத்தை இருக்கிரத்து ..இலங்கை தமிழன் என்றாலே “இடுப்பில் குண்டு வைதிருபனோ ” என்ற நினைப்பை உலகத்துக்கு உருவாகிய பெருமை தவிர.எத்தனயோ வயதான தாய் மார் உடு பிடவைக்கும் ஒரு வேளை கஞ்சிக்கு வக்கிலாமல் சிங்களவனிடம் கையேந்தி நிற்கும் பொது பார்வதி அம்மாளுக்கு எயர்  கண்டிஷன் விமானம்மும் இந்திய அரசின் முழு மரியாதையும் கேக்குது ?. நீங்கள் காட்டுற  பம்மாத்துக்கும் பொய் பிரசரனகளுக்கும் ,”பில்ட் அப்” புகழுக்கும் இன்னமும்  தமிழன் சாக மாடான்.போதுமடா சாமி.நம்புங்கள்  தமிழன் நாளை நல்லா இருப்பான்…உங்களை போன்றவர்கள் உசுப்பேத்தி கொலை களத்துக்கு அனுப்பவிடால்.

  3. அப்துலாஹ் says:
    16 years ago

    ஹா ஹா ..இவர்களின் நகைச்சுவை உணர்வு மெய் சிலிர்க்கவைக்கிறது…இவங்க  சொல்லாட்டி…கிழிச்சாங்க …கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்…அதுசரி ..தமிழ் ஈழம்…அதத்தான் நாடு கடந்த தாக சொல்றாங்கோ…

    • THAMILMARAN says:
      16 years ago

      அப்துல்லா வேறூ வேலைகள் இல்லாயோ.

  4. அசுரன் says:
    16 years ago

    அக்னி, பார்வதியம்மாள் கடிதம் எழுதியதாக கருணாநிதி சொன்னார் அது பார்வதியம்மாளே எழுதியதா?………..ஆனால் அவரது ரத்த உறவுகள் அப்படியான கடிதங்கள் எதையும் எழுத வில்லை என்று மறுத்தார்கள். தவிறவும் இப்போது இயக்கம் இயக்கம் என்கிறீர்களே அந்த இயக்கம் எங்கிருக்கிறது. இயக்கத்தின் இப்போதைய வேலை செம்மொழி மாநாட்டை வாழ்த்தி வரவேற்பதுதானா?……… கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் எங்காவது இயக்கத்தின் பெயரையாவது குறிப்பிட்டிருக்கிறாரா? ஆக எந்த இயக்கம் இதை உங்களுக்கு எப்படி அனுப்பியது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்………… ஒரு மாதத்திற்கு முன்னால் ராமை இயக்கத்தின் தலைவராக சித்தரித்து எழுதியவர்கள்தான் இப்போது இந்த அறிக்கையை தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. கருணாநிதி செத்தாலும் அதற்காக கலங்கப்போவதில்லை…………..உங்களுக்கு இப்போ இயக்கம் தேவை……..நாளை கனிமொழி மகனுக்கு காது என்றாலும் இயக்கத்தில் பெயரில் அறிக்கை வரும்…….இனிமேல் சந்தர்ப்பாத கருணாநிதியின் அடிவருடிகள் உள்ளிட்ட எவருமே எம் மக்களை ஏமாற்ற முடியாது நிறைய பட்டு விட்டோம்.

    • அக்னி says:
      16 years ago

      பார்வதி அம்மாள் எழுதிய கடிதம் எமது மனிதம் வழியேதான் கொடுக்கப்பட்டது. அந்த கடிதம் முறையாக பெறவேண்டியவர்களிடம் பெறப்பட்டது. நீங்கள் கூறுவது போல், அம்மாவின் இரத்த உறவுகள் கடிதம் குறித்து மறுப்பு தெரிவித்தார்கள் என்பது உண்மையல்ல. ஏனெனில், தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் சகோதரியின் கடிதம், அம்மாவின் கடிதத்திற்கு முன்பு வந்தது. அதை இந்த கலைஞர், அம்மாவின் கடிதம் கிடைக்கப்பெற்றால்தான் மத்திய அரசில் சொல்லி, அனுமதி வாங்க முடியும் என தெரிவித்துவிட்டார். (செயலலிதா முதல்வராய் இருந்தபோது, அம்மாவை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்காக அம்மாவே கடிதம் கொடுத்தால் தான் மத்திய அரசிடம் அனுமதி வாங்க முடியும் என கருணாநிதி தெரிவித்தார். இதெல்லாம் ஏற்றுக் கொள்ள நம்மால் முடியாது. ஆனால், அப்போது வேறு வழியில்லாமல், அம்மாவிடம் கடிதம் பெறப்பட்டது). இத்தனை செய்திகள் அம்மாவின் வருகைக்காக நடைபெற்றுள்ளது. இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல், கடிதம் எழுதவில்லை என எந்த ஆதாரத்தை வைத்து கூறினீர்கள். அம்மாவின் கடிதம் குறித்தே அறிந்து கொள்ளாத நீங்கள் இயக்கத்தின் கடிதம் குறித்து இப்போது கேட்கின்றீர்கள். இது உங்களுக்கு சிறுபிள்ளைத்தனமாய் தெரியவில்லையா? ஆனால் ஒன்று, இராம் என்கிற இலங்கைக் கைக்கூலிக்கும், இப்போது வந்துள்ள இயக்கத்தின் கடிதத்திற்கு ஒரு சிறு துளி கூட சம்பந்தம் இல்லை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகக் கூறுகிறேன். நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும். 

      • JAMES FRIEDRICH says:
        16 years ago

        அக்கினி!ஏதாவது,”காமடி,கீமடி பண்ணலியே”!.நானும் ரொம்ப சீரியஸா எழுதிகினு கீ…ரன்.கொஞ்ச நாள் “வெக்கேஷனுக்கு” போயிட்டு வந்துடுர்ரன்…ஏதாவது ஆறுதல் கிடைக்கிறதா என்று பார்ப்போம்!.

        • அக்னி says:
          16 years ago

          உங்களுடைய கேள்விக்கு, நான் பதில் சொன்னதிற்கு, மேலே xxx என்பவர் ஏதோ குறிப்பிட்டுள்ளார்.  அது உண்மையா? அல்லது அவருக்கு பதில் சொல்லி விட்டு வரவும்.

  5. Thamilwenthan.Bsc,Msc,MPhil. says:
    16 years ago

    we the tamils will build the Tamileelam (anc.Naganadu )

  6. Dr. V. Pandian says:
    16 years ago

    I agree with the contents of the article. However, considering the ground realities & the CROOKED ways of the Karunanithi, I find that this message is from LTTE genuine and timely. Just because Karunanithi is using this letter to his favour, let us not be misguided. Karunanithi has the capacity to eat even poission and stay alive. No wonder, he used this letter for his advantage. But, it would not help him. His political decay has started. Just wait and see.

    • Shiva says:
      16 years ago

      The LTTE is not quite functioning as a credible organisation yet. There are two factions with their own agendas. It is unknown what the ‘official status’ of the sender is within whichever the organisation he is soposed to belong to.
      A similar unverified statement was issued from Canada re the Presidential Election in January.
      I see no sense in the LTTE or any Tamil political organisation getting involved on behalf a person of MK’s calibre.
      If it was from whichever wing or toenail of the LTTE, it is a measure of its moral decay as well.

      • Dr. V. Pandian says:
        16 years ago

        Dear Shiva,
        I never said that the letter was written to help Karunanithi. To suppress the fast developping Tamil national aspirations in TN, plots are being hatched by the powers to intimidate the TN people. I consider that the letter was written to null their moves, as it is truely the case, that LTTE, Eelam people are not involved in any affairs of TN.

        • Shiva says:
          16 years ago

          Dear Dr Pandiyan,
          I did not think that you quite said that.
          I only questioned the authenticity of the letter, as you seemed inclined to believe in its authenticity (“…I find that this message is from LTTE genuine….”)
          Thanks for the clarification.

  7. Kalhandhaiccoe says:
    16 years ago

    -உ-/~=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=~/_# இருந்திருந்து பார்த்துவிட்டுக் கடைசியில் எப்பவும்போல இதிலும் (அரசியற்)கூத்தாடி, வேசம்போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம், அதிலேயே ஒரு ‘பெத்தப்-பேருஞ்’ சம்பாத்தித்துக் கொள்வோம்’னு ஏடெடுத்தூட்டாப்பிலெ தெரியுது…!?
    #_ஆனா.., மகனே..’முதன்’மகனே..,–இந்தக் கட்டாப்பு எந்தமிழ் மக்கள் தொடர்ந்து ‘மா’க்களாவே இருந்துவிட மாட்டார்; உம்மை இத்தனைக்கும் சலீசாத் ‘தப்ப’விட மாட்டார்–என்பதை அந் நாடககாரர் உள்ளுணர்ந்து “தெளிந்து” கோடல் அவர்க்கும், அவர்சார்ந்த–அன்றி: அவரைச் சார்ந்த கட்சிக்காரர்க்கும் நன்றாம் என அன்போடு தெரிவித்து அமைதல் ந்ங்கடனாமன்றோ..??/~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் ^கொங்குதேய-நின்று.|=சிவ**சிவ=

  8. Mahendra says:
    16 years ago

    புலிகள் பலமான நிலையிலிருந்து ஈழவிடுதலைபற்றி அறிக்கைகள் வெளியிட்டபோது தங்களை தமிழனாக காட்டிக்கொண்ட கருங்காலிகள் பலர் இது பயங்கரவாதிகளின் அறிக்கைகள் என கூச்சலிட்டனர். தற்போது புலிப் பினாமிகள் அல்லது தங்களை தமிழனாக காட்டிக்கொள்ளும் கருங்காலிகள் அறிக்கைகளை வெளியிட்டும்போது இது புலிகளின் அறிக்கைகள் என உரத்துக் கூச்சலிடுகின்றனர்.

  9. pala.manickam says:
    16 years ago

    கருணா இறந்தால்தான் துரோக நாடகம் முடிவுக்கு வரும்.

    • Kalhandhaiccoe says:
      16 years ago

      -உ-/=# பழ.மாணிக்க்னாரே..,_அப்படி ஒரேயடியா எதிர்கால “இன்பக்கனா”க் கண்டு உமக்கு நீரே களித்துக்கொண்டிராதீரும்..!_”%தான் இருந்தாலும் ஆயிரந் தொல்லை, கீழறுப்பு – கழுத்தறுப்பு, வஞ்சக இரண்டகம்; %தான் இறந்தாலோ:- பல்லாயிரம் கீழறுப்பு, வஞ்சகம், இரண்டகம் என்று தமிழ் மொழி-இன-நாடுகளின்மீது எல்லைதீர் அன்பு ‘பொழி’யும் ^தானைத் தலைவர்^ ‘தக்க’ ஏற்பாடு செய்துவிட்டுப் போகமாட்டார் என்பதுக்கு என்ன உறைப்பு..??! இப்பவே முளிச்சுக்குங்க..!!~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|=சிவ**சிவ=|

  10. சிங்காரம் says:
    16 years ago

    அக்கினி,

    அல்லது அக்கினி சுப்பிரமணியம்,

    நீங்கள் இருந்த அமைப்பையும் அதன் பின்னர் கைது செய்யப்பட்டதையும் எனக்குத் தெரியும் !! நீங்கள் யாருடையா ஆள் என்பதும் கூட எனக்குத் தெரியும் எதுக்கு சார் அந்த வம்பெல்லாம். வணங்காமண் சென்னையில் முடங்கிக் கிடந்த வேளையில் நீங்கள் கோடிக்கணக்கில் சேர்த்த பணம் எல்லாம் எங்கே? உங்களுக்குத் தான் நினைவில்லாமல் இருந்த பார்வதி அம்மா கடிதம் எழுதினாரா. வேணாம்னா வேணாம்!

    • அக்னி says:
      16 years ago

      வாங்க சிங்காரம். வணக்கம். பாவம் நீங்கள். வணங்காமண் இங்கு இருந்த போது பணமா? யார் கொடுத்தது, யார் வாங்கியது என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். ஆதாரம் இல்லாமல் சகட்டுமேனிக்கு கோடிகளை பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் வேறு நான் இருந்த அமைப்பும், பின்னர் கைது செய்யப்பட்டது என்பது பற்றியெல்லாம் பேசுகிறீர்கள். நான் எப்போது கைதானேன். பொய் சொல்வதென்றாலும் பொறுந்த சொல்லுங்கள் சிங்காரம்…. திரும்பவும் பாவம் நீங்கள்.

      • shiva-amir says:
        16 years ago

        Some ppl write b coz karunanaithy only eelam war was lost like that? I want to ask one thing Did you start the war depending on karunanithy??Did u kill Rajiv gandhi with the blessing of karunanithy??I rememeber in 90 s LTTE saying u can trust a stomach ech but not an indian? even now the jaffna ppl say this.They never mix with the Indian origin tamils living in the other parts of sri lanka. Now they cant blame their mad leader for the defeat so they simply blame karunanithy.in 2004 LTTE leader accepted a huge sum of money from mahinda and helped him to win the presidential election.90 % of the mistake is on their leader and now they blame karunanithy.Dont care for these dogs crying.

      • Shiva says:
        16 years ago

        shiva-amir
        The reality is that there was much anger in Tamilnadu about the conduct of the war in Vanni. Had the Tamilnadu political parties cared, the role of Delhi in supporting the genocide could have been diminished if not eliminated. The role of Delhi in Rajapakse winning the war was decisive — by way of logistical support, intelligence, arming, training and later active involvement.
        The anger against the MK regime in TN is about the way in which it deflected mass anger by pretending to do something, while doing nothing; it is about the lies told to the people of Tamilnadu; it is about the false hopes built among Tamils in TN and Sri Lanka.
        The DMK was in a position to bring pressure to bear on Delhi. But what does one expect from a party that saved the government in a confidence vote on a matter involving selling out India’s interests to the US by the secretive nuclear deal.
        The South Indian politician, especially TN politician, is a class by himself/herself when it comes to trustworthiness. Exceptions being few. The Indian establishment has cheated the Tamils of Sri Lanka all along, since 1978.
        The mistake the LTTE and other movements made and still make is that public anger against the governments and sympathy for Tamils will not translate into votes in elections. People have their own issues to worry about; and electoral plitics has its own logic.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...