காஷ்மீரில் போராட்டம் பல மடங்கு அதிகரித்துச் செல்கிறதே தவிற குறைந்த பாடில்லை. இந்நிலையில் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 20 திங்களன்று செல்லும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இக் குழு நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தலைமையில் செல்லும் என்றும் காஷ் மீரில் அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகளை அனைத்துக்கட்சி குழு சந்தித்துப்பேசும் என்றும் தெரிகிறது.காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதட்டம் நிலவி வரும் சூழலில், புதனன்று பிரதமர் இல்லத்தில் அனைத் துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி குழுவை அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திங்களன்று இக்குழு செல்வதற்கான ஏற்பாடுகளில் அரசு இறங்கியுள்ளது.