இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னையில் உள்ள ஐஐடியில் அராய்ச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது மீண்டும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
பொதுவாக இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் உயர்சாதியினர் ஆதிக்கம் அதிகம், பெரும்பாலும் பிராமணர்களே தலைமைப் பதவி முதல் முக்கிய பதவிகளில் இருப்பார்கள். இட ஒதுக்கீடும் முறையாக கடைபிடிக்கப்படாத நிறுவனமாக ஐஐடி இருந்து வருகிறது. பழைய மெட்ராஸ் சென்னை பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்ட போதும் கூட இன்னமும் மெட்ராஸ் ஐஐடி என்றுதான் அந்த உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது உலகப்புகழ்பெற்ற நிறுவனம் ஆகும்.
இங்கு கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வெறும் 22 வயதே நிரம்பிய உன்னி கிருஷ்ணன் பிடெக் கல்வியை முடித்து 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புராஜெக்ட் அசோசியேட்டாக சேர்ந்துள்ளார்கள். வேளசேரியில் தங்கியிருந்து அன்றாடம் ஐஐடிக்கு பணிக்கு வந்து சென்றுள்ளார்.
இவரது தந்தை ரகு இஸ்ரோவில் விஞ்ஞானியாக உள்ளார். தற்கொலைக்கு முன்னர் 11 பக்க கடிதம் எழுதியிருப்பதாகவும் அதைக் கைப்பற்றிய காவல்துறை அதை விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஐஐடி பேராசிரியர் விபின் சாதிப்பாகுபாடும் பாரபட்சமும் இருப்பதாக எழுதி வைத்து விட்டு பரபரப்பைக்கிளப்பினார். ஏற்கனவே இதே குற்றச்சாட்டை கணித மேத வசந்தா கந்தசாமியும் கூறியிருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். இப்போது கேரள மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.சென்னை ஐஐடிக்குள் கடும் சாதியப்பாகுபாடுகள் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதை எப்போதும் ஐஐடி மறுத்தே வருகிறது.இந்த தற்கொலையைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் ஐஐடியை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.