ஈழத்து இலக்கிய பாரம்பரியங்களின் சஞ்சிகைகள் பல விதமான அசைவுகளை செய்து வந்துள்ளமை காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான சஞ்சிகைகளை Periodical Magazines என்று ஆங்கிலத்தில் அழைப்பர். வாரஇ மாத பத்தரிகை என்று தமிழ் அகராதிகள் சஞ்சிகைகளை வரையறை செய்கின்றன.
ஈழத்து இலக்கியங்களை ஆய்விட்குட்படுத்தும் போது சஞ்சிகைகளை நிராகரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் இங்கு பல தேக்கங்களுடனேயே ஆய்வுகள் வெளிக்கொணரப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. காலத்திற்கு காலம் பலரின் தேவைக்கு ஏற்ப பல விதமான சஞ்சிகைகள் தமிழ் மொழி மூலம் இலங்கையில் அச்சிடப்பட்டு இருந்த போதும் அவற்றில் அதிகமானவை இடையில் தேங்கி விட்டதையே காண்கின்றோம். இதற்கு சுட்டிக்காட்டக்கூடிய பல காரணிகள் இருந்த போதும் இவற்றிற்காக செலவு செய்யும் பொருளும்இ படைப்பாளிகளின் ஒத்துழைப்பு இல்லாமையும்இ மக்கள் மத்தியில் இந்திய சினிமா இந்திய தொலைக்காட்சி என்பவற்றின் ஆதிக்கத்தினால் வாசிப்பு பழக்கம் குன்றி போனதுவும் விஷட காரணிகளாக அடையாளம் காணலாம்.
1977 ஆம் ஆண்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாராண்மைவாத சிந்தனையின் காரணமாக இலங்கை நாட்டில் கல்வி, கலை, பொருளாதார, பண்பாடு, தொழில் வாய்ப்பு என்று எல்லா கூறுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இவற்றுடன் இலங்கையில் ஆரம்பித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையின் இலக்கிய அரசியல் சக்திகளை விட முனைப்பாக சஞ்சிகை என்னும் இலக்கிய வடிவத்தினை கையிலெடுத்ததன் காரணத்தினால் பல இலக்கியவாதிகளும், படைப்பாளிகளும் இந்த கலாச்சாரத்தினுள் புதைந்து போனதையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த இலக்கியங்களின் பொருள் ரீதியான பல முரண்பாடுகள் காரணத்தினால் இந்த சஞ்சிகைகளும் இடையில் நின்றுவிடுவது வாடிக்கையான விடயங்களாகும்.
இலங்கை அரசியல் மாற்றங்களை நோக்கும் போது இச்சஞ்சிகைக்கு புதிய வடிவமும் புதிய பார்வையும் கொடுத்த பங்கு சோவியத் நாடு என்னும் சஞ்சிகைக்கும், யுனெஸ்கோ கூரியர் என்னும் சஞ்சிகைக்கும் உண்டு. இது மாத்திரம் அல்லாது சீனாவில் இருந்து வந்த சஞ்சிகைகளும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
இன்று தமிழ் மொழி மூலம் வெளிவரும் சஞ்சிகைகளின் தாயகம், பண்பாடு, புதிய மலையகம், மல்லிகை, ஞானம், அகவிழி, சொல் என பல காணப்படுகின்றன. அவற்றுடன் செங்கதிர் என்னும் சஞ்சிகையும், மட்டக்களப்பு மண்ணில் இருந்து பிரசுரிக்கப்பட்டு 17ஆவது இதழ் மலையக சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
இதன் அட்டைப்படம் மலையக மக்களின் வாழ்வின் புதுப்பாதை அமைத்த கோ நடேசஐயர், மீனாட்சியம்மாள் ஆகியோரின் படங்களுடன் உழைப்பதற்கு மாத்திரம் வாழ்கின்ற மலையக தொழிலாளர்களின் கொழுந்து எடுக்கும் பெண்களின் வர்ண படங்களும் காணப்படுகின்றது.
64 பக்கங்களை கொண்ட செங்கதிர் சஞ்சிகையில் 07 பக்கங்கள் எழுதியதை எழுதும் அந்தணி ஜீவாவிற்காகவும்இ 6 பக்கங்கள் அந்தணி ஜீவாவின் எழுத்துக்களுக்காகவும் ஒதுக்கி இருப்பது மொத்தமாக 30 பக்கங்கள் இளைய தலைமுறையினருக்கு பயன்படாமல் போயிருக்கின்றமையை உணர்த்துகின்றது.
சஞ்சிகையின் இரண்டு பக்கங்களை மலையக மக்களின் வாழ்க்கை அச்சில் பதியப்பட்டதற்கான சான்றுகளை மூத்த எழுத்தாளர் இரா.கோபாலன் அடையாளப்படுத்தியிருந்தார். சஞ்கிகையின் 08 பக்கங்களை பதுளை சேனாதிராஜாவின் கதையின் பணிய லயத்து பார்வதி, பொதிந்து போயிருந்தால், நவஜோதி யோகரட்ணம் எழுதிய நான்கு தலைமுறைகள் என்னும் சிறுகதை 05 பக்கங்களையும், சிவனு மனோகரனின் பாப்பா புள்ள சிறுகதை 6 ½ பக்கங்களையும் நிரப்பி இருந்தன.
பணிய லயத்து பார்வதி சில யதார்த்தங்களுடன் எழுதப்படிருந்தாலும் சாதிய ஒடுக்கு முறைக்கு உயிரூட்டும் சில வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்க வேண்டியது கட்டாயமாகும். ‘ஈஸி செயார்’ என்னும் சொகுசு கதிரை எத்தனைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளில் இருக்கின்றது எனபதுவும் கேள்வியே? எழுத்தாளன் தொழிலாளியாக தன்னை மாற்றி எழுதுவதற்கும் மத்திய தர நிலைமையில் இருந்து இலக்கியம் படைப்பதற்குமான வேறுபாடு இந்த கதையினூடாக காணக்கூடியதாக இருக்கின்றது.
நவஜோதி யோகரட்ணம் எழுதிய நான்கு தலைமுறைகள் சிறுகதையானது கதை வாசிப்பது போல் இல்லாமல் செய்தி ஒன்றினை வாசிக்கும் உணர்வை மாத்திரமே தந்திருக்கின்றது. மலையக மக்களின் பற்றி எரியும் பிரச்சினைக்கு தரவுகள் இலக்கிய வடிவங்களில் எழுத அவசியமா? என்னும் கேள்வியினை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டு தோல்வியுறும் போராட்டங்களின் முடிவு விரக்தியே என்பதனை எழுத்தில் பதிந்து விரக்தியில் இருக்கும் உழைப்பாளர்களை விரக்தியின் விளிம்பிற்கே இட்டுச் செல்வது இலக்கியமா?
அல்லது அடுத்த கட்ட போராட்டமும், மக்கள் ஐக்கியமும், புதிய பாதையும் வெற்றிக்கான நேர்ப்பாதைகளாக காட்டி படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவது இலக்கியங்களின் கடமையா? என்னும் கேள்வி விதைப்புடன் சிவனு மனோகரனின் பாப்பா புள்ள சிறுகதையில் சிவனு மனோகரனின் ஒரு மணல் வீடும்இ சில எருமை மாடுகளும் என்னும் சிறு கதைத் தொகுப்பின் படு பிற்போக்கான கதை முடிவுகளுடன் ஒப்பிடும் போது பாப்பா புள்ள கதை சற்று வளர்ச்சியடைந்திருப்பது பாராட்டக்கூடியது. முந்தைய தொகுப்பிலே தற்கொலையும், விரக்தியினையும் முடிவுகளாக எழுதியிருந்த படைப்பாளி சற்று உயிரோட்டமாக எழுதியிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் கதையின் முடிவு நொந்து நூலாகி இருக்கும் மலையக படைப்பாளிகளை விரக்தியின் உச்சத்திற்கு இட்டு செல்லும் மனப்பான்மையினை ஏற்படுத்தியிருப்பது விமர்சிக்க வேண்டிய விடயமாகும்.
சு. முரளிதரனின் செல்லுபடியாகும் வறுமைக்கோடு என்னும் கவிதையும்இ மாரிமுத்து சிவகுமாரின் கூடி வாழும் குணமுள்ள குன்றுகள் எனும் கவிதையும்இ பபியானின் கோடித் தொண்டு கவிதையும்இ பசித்தீர்க்கும் வயிறு எனும் சி. பன்னீர் செல்வத்தின் கவிதையும்இ ச. கலை எழுதிய மலையகம் என்னும் கவிதையும் பல வித்தியாசமான பரிணாமங்களில் இருந்து மலையகத்தினையும்இ மக்கள் வாழ்வியலையும் அடையாளப்படுத்தும் கவிதைகளாக காணப்படுகின்றன. கவிதைகள் மாற்றத்திற்கான தூண்டுதல்களாக இருக்கக்கூடியவை என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஆனால் தூண்டல்கள் மாத்திரம் அல்ல சமூக மாற்றம் தொடர்பாக படைப்பாளி பங்கெடுக்க வேண்டிய பல செயற்பாடுகளும் உண்டு என்பதனை பேராசிரியர் கைலாசபதி பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
மலையகத்தின் இலக்கிய முன்னோடிகளுல் ஒருவரான கே. கணேசனுக்காய் எழுதப்பட்ட சிறு குறிப்புகள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவையாகும். மலையக சிறுகதைகளுக்குள் உயிரோட்டமான கதாப்பாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்கு ஜீவன் கொடுத்து நடமாடவிட்ட என்.எஸ்.எம். இராமையா சில ஞாபக குறிப்புகளையும் மூத்த எழுத்தாளர் சக்தி பாவைய்யா பற்றி குறிப்புகளும் மலையக இலக்கியத்தில் கால் பதிக்கும் புதிய படைப்பாளிகளுக்கு தேடி வாசிக்க தூண்டும் தகவல்களாக அமைந்திருந்தது.
எழுத்தாளர் மு. சிவலிங்கத்தின் மலையகத்தில் நாட்டுபபுற கூத்துக்கள் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் மலையகத்தில் சிறுகதை வரலாறும்இ வளர்ச்சியும் எனும் கட்டுரையும், சாரல் நாடன் எழுதிய மலையக நாவல்கள் எனும் கட்டுரையும் வாசிக்கும் போது அனைத்துமே எழுத்தில் பதியப்பட்ட விடயங்களையே மிணடும் மீண்டும் எழுதுவது மீட்டல் பயிற்சிக்கு மாத்திரமே வழி வகுக்குமே தவிர எந்த விதமான அசைவுகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பது கண்ணாடியில் முகம் பார்ப்பவர்களுக்கு மாத்திரமே அது போன்று இலக்கியங்களை தேடி வாசிக்கும் நிலைமை மருவி வரும் காலகட்டத்தில் செல்வி நாராயணன் செல்வகுமார் எழுதிய மலையக நாட்டார் பாடல்களிலே அடக்குமுறைச் சித்தரிப்பு என்னும் கட்டுரை நாட்டார் இயலின் ஒரு சில முணைப்புகளை அடையாளம் காட்டி நிற்பதாக அமைகின்றது. ஆனந்தி எழுதிய உழைக்கும் பெண்மணியுடன் ஒரு நாள் என்னும் சில குறிப்புகள் வெளியிலிருந்து மலையகத்தை நோக்கும் ஒருவரின் சிந்தனைக்குள் மாத்திரம் ஏற்படக்கூடிய அனுதாபங்களை உருவாக்கக்கூடியதாக இருக்கின்றது இருந்தும் அவை மாத்திரம் அன்றி ஊடுருவிப் பார்க்ககூடிய பல விடயங்கள் மலையக மண்ணில் உள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மிதுனன் என்னும் புனைப் பெயரிலே விளாசல் வீராக்குட்டியின் உரை நடை மிகவும் கவரக்கூடியதாகவும் ரசிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. இதிலும் சாதிய பெயர்களை சிலேடையாய் கூறி அந்த சமூகத்தினரின் மனங்களில் வேல் பாய்ச்சும் வேலைகளை செய்வது எழுத்தாளர்கள் நாகரீக காலத்திற்குள் வராதவர்களோ என்னும் கேள்வியினை எழுப்பி நிற்கின்றது.
திரு. து. கோபால கிருஷ;ணன் செங்கதிரோன் என்னும் பெயரில் எழுதுவதும் செங்கதிர் சஞ்சிகையினை வெளியிடுவதும் இலகுவான காரியம் அல்ல. தேசிய கலை இலக்கிய பேரவையின் மட்டக்களப்பு கிளை செயலாளரான து. கோபால கிருஷ;ணன் மலையக சிறப்பிதழாய் வெளியிட்டிருக்கும் 17 வது செங்கதிர் சங்சிகைக்கு மலையக கலை இலக்கியவாதிகள் சார்பாகவும் உழைத்து தொழிலாளர்கள் சார்பாகவும் நன்றிகளை கூறவேண்டியது எமது கடமையாகும்.
இவ்வாறான எழுத்துக்களை தென்னிந்திய சினமாக் குப்பைகளின் மத்தியில் வளர்த்தெடுக்க நாம் என்ன செய்யலாம்? தென்னிந்திய தமிழ் உணர்வாளர்களும், புலம் பெயர் வாய் சவடால்களும் இதற்கு எதாவது செய்யலாமே? கிங்ஸ்லி இவற்றை எப்படிப் பெறலாம் என ஆலோசனை கூறலாமே?
MR.T.GOPALA KRISHNEN
19 UPSTAIR ROAD
BATTICALOA
SRI LANKA
senkathirgopal@gmail.com
0652223950 0772602634
தென்னிந்த்தியவில் இருந்து வருவது எல்லாம் குப்பை அல்ல, அதனை விட அதிக குப்பைகள் புலியின் ஆதரவோடு புலம் பெயர் சமூகத்தில் இருந்து வந்த்தது, செங்கதிர் சங்சிகையை எவ்வாறு பெறலாம் என தயவு செய்து தெரிவிக்கவும்
புலிகளுக்கு குடை பிடிக்கத்தான் புலம் பெயந்த தமிழர்கள்உள்ளனர்.
dear sir, iread your article very nice. now i havefinished a documentary film. the film focus srilankan-tamilnadu malayagamakkal tea estate life style.please contact me davamudhalvan@yahoo.in