தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கும் விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்படவில்லை என்றால், கெரில்லா யுத்தம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.தூதுவர் ஜான் ஹோம்ஸ் எச்சரித்துள்ளார்
இதனிடையே,விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் முழுமையாக வீழ்த்திவிட்டதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு கரையோரத்தில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியிருந்த கடைசி துண்டு நிலத்தையும் கைப்பற்றிவிட்டதாக இராணுவம் அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
ஜோர்டான் பயணம் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அங்கிருந்து கருத்து வெளியிடுகையில், விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்தனங்களில் இருந்து விடுதலை பெற்ற நாட்டுக்கு தான் திரும்பவுள்ளதாக என்று குறிப்பிட்டார்.
கரையோரத்திலிருந்து விலகிய, நாலாபுறமும் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு பகுதிக்குள் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.
ஆயிரக்கணக்கான சிவிலியன்களும் உடன் சிக்குண்டிருக்கலாம் என்று உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்> எங்கு அடக்குமுறை உண்டோ அங்கு போரட்டமும் இருக்கும என்கினறார் தூதுவர்! இது ஐணநாயக நீரோட்டக்காரர்களுக்கு புரியுமோ?