இலங்கையில் சர்வாதிகாரி ராஜபக்சவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட கொழும்பு உயர்குடிகள் மற்றொரு கொழும்பு தமிழ் உயர்குடியைச் சேர்ந்த சுமந்திரன் என்ற முன்னை நாள் பாதிரியாரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்.பியை அமைச்சராக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக தாம் எந்த அமைச்சரவையிலும் அங்கம்வகிக்கப் போவதில்லை எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தலைகீழாக மாறியிருப்பதாகத் தவல்கள் தெரிவிக்கின்றன. மொழி, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சராக சுமந்திரன் பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.
அதேவேளை போர்க்குற்றவாளியும் இனப்படுகொலை இராணுவ நடவடிக்கைகளைத் தலைமைதாங்கி நடத்தியவருமான சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.
25 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் சம்பிக்க ரணவக்க எரிசக்தி அமைச்சராக சம்பிக்க ரனவக்க பதவியேற்பார் எனத் அறிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வமாக இத் தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்பட்வில்லை எனினும் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.
சுமந்திரன அமைச்சராவதற்கு முன்பதாக இலங்கையில் சிறைவைக்கபட்டுள்ள அரசியல் கைதிகள், காணமல் போனோர், கடத்தபட்டவர்கள், வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள், சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து அழிக்கப்படும் யாழ்ப்பாண நீர் மற்றும் நிலவளம் போன்றன தொடர்பான பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்குமாறு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பிந்திய தகவல்:
புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் பெயர்களுடன் வெளியான பட்டியலும் தான் அமைச்சராக முன்மொழியப்பட்டதும் தவறான தகவல்கள் என்று சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவையில் பங்கேற்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் உருமைகளோ அல்லது ஆட்சி அதிகாரங்களோ கிடைப்பது
முக்கியமான தொன்றல்ல. மந்திரி பதவி ஒன்று கிடைத்தாலே போதும்
உலகத்தமிழர்களையே விலை பேசிவிடுவார்கள் இவர்கள்.
good move that one of the TNA MPs and a sensible, educated and responsible person is becoming a Minister. We are getting back to good old days of GG Ponnampalam who was the only person who developed the North and East through his ministerial post.
First of all, the Tamils, mainly Jaffna Tamils would have to come out of their jealousness. If Mavai had been given the Minister post, I do not think any one like mannan above, would make a comment like this.
யாழ்நகரை இலங்கை அரசுடன் சேர்ந்து அபிவிருதியடையச் செய்த
துரையப்பாவை கொல்ல உசுப்பேத்தியவர்கள் யார்? 30 ஆண்டுகால
தமிழரின் வாழ்வை பின்னடையச் செய்து வன்னியில் மக்களின்
அழிவிற்கு காரணமாக இருந்தவ்ர்கள் யார்? ஒட்டுக்குழுக்கள்
துரோகிகள் பட்டம் சுமதியவ்ர்கள் யார்?
அதுமட்டுமல்ல தமிழரிற்கு அபிவிருத்தி தேவையில்லை காணிஅதிக்கரமும் பொலிஸ் அதிகாரமும் கேட்டவ்ர்கள் யார்?
தமிழரின் உருமையே தேவை யென சொல்லி வாக்குப்பிச்சை கேட்டவர்கள்
யார்?
டக்ளஸ் ,பிள்ளையான்,கருணா, சேர்ந்தால் துரோகிகள் தமிழர் கூட்டமைபுகள் சேர்ந்தால் அபிவிருத்தியா?
இந்தச் செய்தி தவறானது என்றும் தானோ ததேகூ உறுப்பினர்களோ அமைச்சுப் பொறுப்பு ஏற்கப் போவதில்லை என்றும் சுமந்திரனின் “ஃபேஸ்புக்” பக்கம் கூறுகின்றது.
சுமந்திரன் அமைச்சராகிறார்.
சுமந்திரன் அமைச்சராகிறாரா?
புதிதாக அமையவுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்று எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாளை அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றை அளிக்க முன்வந்துள்ளதாக புதிய அரசுத் தலைமை அறிவித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பங்கேற்குமா? எனக் கேட்ட போதே, எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அக்கட்சி பதிலளித்துள்ளது.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்.பியை அமைச்சராக்கத் தீர்மானித்துள்ளது” என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்.பியை அமைச்சராக்கத் தீர்மானித்துள்ளது என்ற வதந்தி ஒன்றுள்ளது என்றல்லவா எழுதப்பட்டிருக்கவேண்டும்.
யதார்த்தத்தில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் சமூக, பொருளாதார, வாழ்வாதார அரசியல் உரிமை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வை அமைச்சு பதவிமூலம் தேட முடியும் என்றால் அமைசர் பதவி ஏற்ப்பதோ ,அரசாங்கத்தில் பண்கேர்ப்பதோ தவறில்லை.கடந்த பல சதாப்தங்களாக நாம் எதை சாதித்தோம்அளிவைதவிர?எதையுமே நாம் கற்றுக்கொள்ளவில்லைய? நாம் தொடர்ந்து இனவாதம் பேசுவதை தவிக்க முயற்சிக்கவேண்டும்.மனித நேயம் கொண்ட மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.
If Mr.Sumanthiran or TNA accept the a minister post all tamil people definetely hate him. when was the war time no bodys know him.And Now Where is Mr.Sarvanabavan he also doing pesonal works.
சுமந்திரன் முன்னைநாள் பாதிரியார் என்று குறிப்பிட்டுள்ளது தவறு. அவர் கிறிஸ்தவரே தவிர பாதிரியாராக இருந்ததில்லை. அவர் வழமையான தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் போல வழக்கறிஞர் தான்.