சுன்னாகம் சார்ந்த பகுதியிலுள்ளவர்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்புக்கள் உண்டு என யாழ்.மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. சுன்னாகம் சார்ந்த பகுதியிலுள்ள நீரில் ஈயம் கலந்திருப்பதாகவும் அந்த நீரைத் தொடர்ச்சியாக உட்கொண்டவர்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஈயம் கலந்த விவசாய நிலத்தில் விளையும் நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட விளைபெருட்களை உட்கொள்வோருக்கு இவ்வாறான பாதிப்புக்கள் நீண்ட காலத்தில் ஏற்படலாம் என சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
மலேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் இன் உப நிறுவனமான நோதேர்ன் பவர் என்ற நிறுவனம் இலங்கை அரசின் அங்கீகாரத்தோடும் அனுசரணையோடும் உற்பத்தி செய்த மின்சாரக் கழிவுகள் மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றப்பட்டதால் வடபகுதியில் ஒரு பகுதி மக்களின் உயிர் வாழும் உரிமை இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனமும் அதன் பின்னணியில் செயற்பட்டவர்களும் இப் பேரழிவிற்குப் பொறுப்பெடுக்க வேண்டும்.
மனிதர்களுக்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சூழல் சார்ந்த குற்றச் செயலில் ஈடுபட்ட பலரை இன்டர்போல் நிறுவனம் குற்றவாளிகள் பட்டியலில் வகைப்படுத்தித் தேடி வருகிறது. அந்த வகையில் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் பின்னணியில் செயற்பட்ட அதன் இயக்குனர்கள், இலங்கை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் தேடப்படும் குற்றவாளிகளாக்கப்பட வேண்டும்.
பிரித்தானியாவில் வாழும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனரும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருமான நிர்ஜ் தேவா என்பவர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். நிர்ஜ் தேவாவைத் தண்டிகக் கோரியும் சுன்னாகத்தில் அதிபார கழிவு டீசலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் முறையை நிறுத்தக் கோரியும் பறை – விடுதலைக்கான குரல் என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
வரலாற்றில் முதல்தடவையாக சூழலை மசுபடுத்தியவர்களைத் தேடும் இன்டட்போல்: தேவா வெளியில்
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் வலிகாமம் பகுதிமக்களுக்கு குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன:-
23 பெப்ரவரி 2015
வலிகாமம் பகுதியில் அண்மையில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்ததனால் மிகப்பெரிய சுகாதார பிரச்சினை எழுந்துள்ளது. சுன்னாகத்தில் இயங்கும் தேர்மல் பவர்பிளாண்ட் நிறுவனத்தால் வெளியேற்றப்படும் கழிவு எண்ணை நிலத்தடி நீருடன் கலந்துள்ளதால் சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை, ஏழாலை, அளவெட்டி முதலான வலிகாமத்தின் பலகுதிகளில் உள்ள கிணற்று நீர்மாசடைந்துள்ளது. இதனால் வலிகாமம் பகுதிமக்கள் சுத்தமான குடிநீர் இன்றி அல்லலுறுகின்றனர்.
இந்தநிலையில் குறித்த குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வினை வழங்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை வலிகாமம் வடக்கு கோணாங்குளம் பகுதி மக்களுக்கும் வலிகாமம் பகுதியிலுள்ள பாடசாலை களுக்கும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.
வலிகாமம் வடக்கு கோணாங்குளம் பகுதியில் வசிக்கும் சுமார் 260 குடும்பங்களுக்கு ஐயாயிரம் லீற்றர் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும் மகாஜனாகல்லூரி, யூனியன்கல்லூரி, நடேஸ்வராக்கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம், மெய்கண்டான்ம காவித்தியாலயம், மயிலணி மகாவித்தியாலயம், திருஞான சம்பந்தர் மகா வித்தியாலயம், சைவ சன்மார்க்க மகாவித்தியாலயம், ஏழாலை தெற்குஅ.மி.த.க.பாடசாலை, இசிதோர்றோ.க.த.க.பாடசாலை மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டன. அத்துடன் நலன் புரிநிலையங்கள், பாலர் பாடசாலைகள், மற்றும் மருத்துவ மனைகளுக்கும் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.
லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி மற்றும்ஞானம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி. ஞானாம்பிகை அல்லிராஜா ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய சுத்தமான குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குடிநீரைப் பெற்றுக் கொண்ட வலிகாமம் பகுதிபயனாளிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் தேவையான நேரத்தில் இந்தஉதவி வழங்கப்பட்டமையை பாராட்டினர்.
லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இதற்கு முன்னரும் மக்களுக்கு தேவை ஏற்படும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் எட்டு மாவட்டங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இலங்கையின் 8 மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டுள்ள லைக்காவின் ஞானம் அறக்கட்டளை, இதுவரை சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியிலான உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிராஜ் தேவா 2008 அளவின் பாவிக்கப்பட்ட டயர் (Tyre) -இலிருந்து ஒருவகை எண்ணெய் போன்ற அதிபாதக எரிபொருள் தயாரிக்கும் ஆலையொன்றை அமைக்க ஸ்ரீலங்கா பாராளுமன்றில் அனுமதி பெற்றவன். அவன் இயக்குனனாக இருக்கும் இன்னொரு பிரித்தானிய நிறுவனத்தின் ஊடாக சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை வலுப்படுத்தியவன். அதற்கு பிரித்தானிய தூதரகமும் உதவியையும் வழங்கியதாம். 2007 அளவில் இப்பாதக முயற்சியின் ஆரம்பக்கட்டம் இங்கே பதியவாகியுள்ளது.
http://www.island.lk/2007/02/16/news30.html
இங்கே மசகு எண்ணெய் (Crude Oil) என்ற பதம் பிழையாகப் பாவிக்கப்ப்ட்டுள்ளது.
எது எந்த எண்ணெய், அதில் எது கழிவு என நிர்னயிப்பாதில் கவனம் வேண்டும். அண்மையில் கொழும்பில் பணிபுரியும் யாழ் சுகாதார வைத்தியர் ஒருவர் சுன்னாகத்தில் ஈயம் செறிந்த கிணருகள் பற்றி விபராமாக எழுதியிருந்தார். ஆனால் அதிக் கழிவுகள் கொட்டப்படுவது கண்டுபிடிக்கப்படவேண்டும் என எழுதியிருந்தது கவலிக்கிடமானது. பார எண்ணையை எரிப்பதே வாயு மண்டலத்தில் கந்தகத்தால் (Sulphur) மட்டுமே பெரும் உடல்நல பாதிப்பை ஏர்படுத்தும். ஒரு சுகாதார வைத்தியர் இதனைத் தவற விடுவது பிழை. எரி பொருளில் எப்படி கழிவு வரும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். ஒரு கழிவு அகற்றும் தொழிற்சாலையை மின்னுற்பத்தி ஆலையாக பாவிக்கும் இடத்தில் எரிபொருள் வடிகட்டப்படுவதாக இருக்கலாம். அல்லது அடிக்கடி தரம் குறைந்த எரிபொருளை கழிவாக அப்புறப்படுத்த தேவையிருக்கலாம். எத்தனையோ தெரியாத விடயங்கள் நிரம்பி இருக்க வெறுமனே மின்னுற்பத்தி நிலையத்தில் கழிவு கொட்டப்படுகிறது, ஒரு எண்னெய்க் குளம் இருந்தது என கதை கட்டுவது பிழை.
நோதர்ன் பவர் கொம்பனி -க்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அதன் இயக்குனர்களே. அவர்களை பாதிப்புற்ற மக்கள் சட்ட ரீதியாக அணுகி என்ன நடந்தது என்பதை கேட்க வேண்டும். ஸ்ரீலங்காவில் புதிய அரசு, புதிய நீதி அமைச்சன், புதிய நீதியரசன் என பேய்க்காட்டல்கள் நடதேறிக்கொண்டிருக்கவே செய்யும்.
இதற்கு பிரித்தானியாவில் பிரஜாவுரிமை பெற்ற மூன்று இயக்குனன்கள் தாய் நிறுவனமான என்.டி.டீ வோக்கர்ஸ்-இல் இருப்பதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
‘பார எரி எண்ணெய்’ என்ற கழிவை ‘அது இது டீசல்’ என பிழையாக வர்ணிப்பதை தவிர்க்கவும். அதிபார எரி எண்ணெய் என்று அதில் ஆகலும் கெட்ட கழிவுப்பொருளை வர்ணிப்பது சரியாகலாம்.
மேலும்,
லைக்கா-உம் நிராஜ் தேவா-இன் ‘கழிவில் இருந்து எரிசக்தி’ உருவாக்கும் முதலீட்டு நிறுவனமும் கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டிய கொமன்வெல்த் வியாபார அரங்கு (Commonwealth Business Forum) என்ற பாதகக் கூட்டுறவினால் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். நீர்ப்பிரச்சனைய தற்காலிகமாக ஆவது தீர்க்க ஞானம் அறக்கட்டளையோ வேறெவரோ முன்வருவது நற்காரியம். ஆனால் இனவழிபுக்கு அடிகோலும் நீர் மாசுபடுத்தப்பட்ட விடயத்தில் அதீத அவதானம் வேண்டும். யார் யார் எப்படி உதவ வருகின்றனர் என்பது கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு தடவை தண்ணீா்ப்போத்தல்கள் வழங்கப்பட்டதால் மக்களின் நரம்பு மண்டலத்தில் ஏற்பட இருந்த தாக்கம் இல்லாது போக வாய்ப்பு உருவாகிவிடலாம் அத்தோடு தண்ணி இல்லாவிட்டால் என்ன பிரச்சனை?? இருக்கவே இருக்கிறது போத்தல் தண்ணி எல்லோரும் வாங்கி பருகுங்கள் என்று விளம்பரமும் செய்துவிட்டால் யாராவது தண்ணீா் போத்தல் வியாபாரத்தையும் அமோகமாக தொடங்கியும் விடலாம்.
Symphony’s claim on a plastics and interest in energy are both at play here.
Symphony’s plastic business lobbying and business tactics are an ongoing European Parliamentary issue.
Nirj Deva, a Conservative Party MEP since 1999 is also Symphony’s Chairman of the Board of Directors.
Symphony Energy Resources Ltd is a revelation.
Shocking!
http://www.symphonyenvironmental.com/files/uploaded/corp/interimfinancialstatements/Final_Interims_Sept_2006.pdf
and page 32 of this document.
http://www.ceypetco.gov.lk/Annual_Report_2007.pdf
What happenned to Nirj Deva’s Website?
Champika Ranawaka was only Minister of Environment in 2007.
The link between Champika Ranawaka is that Panadura pirivena bestowed ‘Vishwa Keerthi Sri Lanka Abhimani’ (universally famous pride of Sri Lanka) Nirj Deva wants to convert Tamils to become buddhist.