தென் மாவட்டங்களில் வ.உ.சி. மட்டுமன்றி சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி ஆகியோரும் மக்களோடு வாழ்ந்து சுதேசி இயக்கங்களை முன்னெடுத்து சென்றனர்.
இந்த காலகட்டத்தில்தான் இந்திய அளவில் அரசியல் வர்க்க சக்திகள் உருவாகின. தொழிற்சங்கங்கள், புதிய வர்த்தக அமைப்புகள், மூலதன சக்திகள் தோன்றின.
தொழிலாளர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், மாணவர்கள் அணி திரண்ட காலம். சுதேசி என்பது நாடு தழுவிய கருத்தாக உருவானது. இதில் எந்த கட்சியோ, தனிபட்ட நபரோ சொந்தம் கொண்டாட முடியாது. இதில், எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. சுதேசி என்பது பொருளாதார தேசியம் மட்டுமல்ல. அது அரசியல், சமூக ரீதியான கருத்தாகவும் உருவானது. பொருளாதார, அரசியல், சமூக தன்னிறைவு பெறுவதுதான் சுதேசியம்.
சுதேசிய கருத்துக்களை வலியுறுத்திய தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், நம்முடைய நாடு வளர வேண்டும். நாட்டு மக்கள் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சுதேசி கருத்து மேலோங்கி நின்றது. வ.உ.சி. கப்பல் ஓட்டியதில் இருந்து டாடா நிறுவனம் தொடங்கியதுவரை அனைத்துமே சுதேசியம்தான் என்றார்.
பச்சைப் பொய்!.இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும்,சூதேசிக்கும் சம்பந்தம் கிடையாது.இவர்களும் காங்கிரஸ் கட்சியும் ஒரே நிலைபடுதான் எடுத்தார்கள்.அனைத்து பழைய இந்திய கம்யூனிஸ்டு தலைவர்களும் இலண்டனில் படித்தவர்கள்,”காலனித்துவ” ஆட்சியை பகிரங்கமாகவே ஆதரித்தார்கள் என்பது வரலாறுப் பதிவு.1945 க்கு பிறகுதான்,ஸ்டாலினிய உந்துதலில்,சிறிது சுதேசி எண்ணம் கொண்டார்கள்!.அது சரி கப்பலோட்டிய தமிழனுக்கு,யார் பண உதவியை தைரியமாக செய்து நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை என்று,கடைசியில் இதன் கரணமாக போண்டியானது?.பல வரலாறுகள்,”கங்காணிகளால்” மறைக்கப் பட்டு விட்டன!.
டாடா இந்திய பொருளாரத்தைநிமிர்த்தினார்,அன்னை இந்திரா அவரது பெண்டைநிமிர்த்தினார்.பெரியார் பொதுவுடமைவாதி போன்ரே செயற்பட்டார் ஆனால் தமிழரும் தமிழும் தமிழ்கத்தில் தன் இருப்பை இழந்தது.அய்யாநல்லகண்ணூ சிறந்த அரசியல்வாதி இந்த ராஜா யார் தெரியாது.